இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜாகுவார் லேண்டு ரோவர் நிறுவனத்தில் 2022ஆம் நிதியாண்டில் சுமார் 2000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த நிதியாண்டில் உலகளவிலான வர்த்தகத்தில் இருந்து சுமார் 2000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் ஜாகுவார் லேண்டு ரோவர் நிறுவனத்தில் இருக்கும் ஊழியர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஜாகுவார் லேண்டு ரோவர் நிறுவனத்தின் 2019-20 வருடாந்திர அறிக்கையின் படி தனது உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 40,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
எலக்ட்ரிக் கார் திட்டம்
உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வரும் ஜாகுவார் லேண்டு ரோவர் நிறுவனத்திற்கும், அதன் தயாரிப்புகளுக்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான மதிப்பும் இருக்கும் நிலையில் திங்கட்கிழமை ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. 2025ஆம் ஆண்டுக்குள் ஜாகுவார்-ம், 2024க்குள் லேண்டு ரோவர் நிறுவனமும் எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே தயாரிக்கும் ஒரு நிறுவனங்களாக மாற இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக அறிவித்தது.
2.5 பில்லியன் பவுண்டு முதலீடு
இந்த மாபெரும் திட்டத்திற்காக வருடம் 2.5 பில்லியன் பவுண்டு அளவிலான தொகை ஜாகுவார் லேண்டு ரோவர் நிர்வாகம் முதலீடு செய்ய உள்ளதாகவும், இதன் மூலம் சப்ளை செயின் மற்றும் வர்த்தகப் பரிமாற்ற பணிகளைச் செய்யவும் முடிவு செய்துள்ளது. எலக்ட்ரிக் கார் திட்டத்தின் மூலம் 2039க்குள் ஜாகுவார் லேண்டு ரோவர் நிறுவனம் கார்பன் நியூட்டரல் நிறுவனமாக மாற உள்ளது.
ஜாகுவார் லேண்டு ரோவர்
இந்த வர்த்தக மாற்றத்தின் கீழ் ஜாகுவார் லேண்டு ரோவர் தனது உற்பத்தி அளவீடுகளை அடுத்த சில ஆண்டுகளில் பெரிய அளவில் குறைக்க முடிவு செய்துள்ளதாகவும், இந்த மாற்றங்கள் அனைத்தும் புதிய தலைமை நிர்வாக அதிகாரியான Thierry Bollore தலைமையில் மேற்கொள்ளப் பட உள்ளதாகவும் டாடா மோட்டார்ஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் JLR நிறுவனம் முடிவு செய்துள்ளது.
உற்பத்தி மற்றும் வர்த்தகம்
ஜாகுவார் லேண்டு ரோவர் நிறுவனம் தற்போது இங்கிலாந்து நாட்டின் வெஸ்ட் மிட்லேண்ட்ஸ், ஸ்லோவாகியா, இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளில் கார் உற்பத்தி தொழிற்சாலையை வைத்துள்ளது. இதேபோல் சீனாவில் ஜாகுவார் பிராண்டுக்கு மிகப்பெரிய வர்த்தகச் சந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் அரசின் முடிவு
ஜாகுவார் லேண்டு ரோவர்-வின் புதிய எலக்ட்ரிக் கார் திட்டத்திற்கு இங்கிலாந்து அரசின் முடிவும் முக்கியக் காரணமாகும். பிரிட்டன் அரசு 2030க்குள் தன் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் உற்பத்தியை நிறுத்த திட்டமிட்டு வருகிறது. இதேபோல் உலகில் பல நாடுகள் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களைப் பயன்படுத்தக் கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டு வருகிறது.
JLR ஆதரவு
இத்திட்டத்திற்கு ஆதரவாகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் காரணமாக ஜாகுவார் லேண்டு ரோவர் 2025க்குள் முழுமையான எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமாக மாற முடிவு செய்துள்ளது. ஜாகுவார் லேண்டு ரோவர் ஒரு பிரிட்டன் நிறுவனம்.
இந்த எலக்ட்ரிக் கார் திட்டத்தின் முதல் படி தான் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள 2000 ஊழியர்கள் பணிநீக்கம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications