இந்தியாவில் கேபிள் டிவிக்கு வேட்டு வைத்த OTT தளங்கள் தற்போது பல பரிமானத்தில் உருவெடுத்து ஒட்டுமொத்த எண்டர்டெயின்மென்ட் துறையை ஆட்டி வைக்கும் வேளையில், இத்துறையில் சத்தமில்லாமல் ஒரு பெரிய பிஸ்னஸ் மாடலை உருவாக்கி மக்களுக்கு பணத்தை மிச்சப்படுத்த சூப்பரான வழியை கொடுக்கிறது டாடா குழுமம்.
டாடா குழுமம் இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்கு அனைத்து துறையிலும் இயங்கி வருகிறது. டாடா ப்ளே பின்ஞ் (Tata Play Binge) என்ற பெயரிவில் இந்தியாவின் மிகப்பெரிய OTT அக்ரிகேட்டர் தளமாக இயங்கி வருகிறது, அதாவது தனித்தனியாக இயங்கி வரும் OTT தளங்களை ஒன்றாக ஒரே இடத்தில் இணைக்கும் தளம் தான் இந்த Tata Play Binge.

Tata Play Binge தளத்தில் சுமார் 27 OTT தளங்களை ஒன்றாக இணைத்து மக்களுக்கு முக்கிய சேவையாக அளிக்கிறது, முன்பு DTH இணைப்பு இருந்தால் மட்டுமே இச்சேவையை பயன்படுத்தும் நிலை இருந்தது, ஆனால் தற்போது அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களும் மொபைல், கம்ப்யூட்டர், டிவி அனைத்து கருவிகளிலும் ஒரே நேரத்தில் 4 வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் அட்டகாசமான சேவையை அளிக்கிறது.
Tata Play Binge ஒன்று இருந்தால் போதும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில், ZEE5, SonyLIV, துவங்கி aha, sunnxt வரையில் அனைத்து உள்நாட்டு OTT தளங்கள் முதல் Lionsgate, docubay, உட்பட வெளிநாட்டு தளங்கள் என மொத்தம் 27 OTT தளங்களை ஒன்றாக இணைத்து கொடுக்கும் காரணத்தால் இனி ஓவ்வொரு தளத்திற்கும் சப்ஸ்கிரிப்ஷன் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
Tata Play Binge தற்போது மெகா மற்றும் சூப்பர் என்ற இரு திட்டங்களை வழங்கி வருகிறது. இதில் மெகா திட்டத்தின் கீழ மாதம் 349 ரூபாய் சந்தா கீழ் 27 OTT தளங்களையும் வழங்கி வருகிறது. இதுவே Super என்ற திட்டத்தின் கீழ் 22 OTT தளங்களை 249 ரூபாய் கட்டணத்தில் அளிக்கிறது.
டாடா ப்ளே பின்ஞ் தளத்தில் Disney+ Hotstar, Sun NXT, Hungama Play, Sony LIV, ReelDrama, Eros Now, ZEE5, Voot Kids, ShemarooMe,Jio Cinema, Chaupal, Curiosity Stream (Mega), Hallmark, Namma Flix, EPIC ON, MX Player, Planet Marathi, Travelxp, Lionsgate Play (Mega), manoramaMAX, DocuBay,Aha, Koode, ShortsTV (Mega),VROTT, Tarang Plus, Gaming ஆகிய OTT தளங்கள் உள்ளது.


Click it and Unblock the Notifications