டாடா ப்ளே, இந்தியாவின் முன்னணி கட்டண டிவி மற்றும் ஓடிடி (OTT) சேவைகளை வழங்கும் நிறுவனமாகும். 2001 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, 2006 ஆம் ஆண்டு தனது சேவைகளை தொடங்கிய இந்த நிறுவனம், தரமான உள்ளடக்கங்களை வழங்குவதில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இதன் தலைமை நிர்வாகியாக இருக்கும் ஹரித் நாக்பால், சமீபத்தில் தனது LinkedIn பக்கத்தில் ஒரு சிறப்பு பதிவு பகிர்ந்துள்ளார். அது வேலைவாய்ப்பு நேர்காணல்களில் வேலை தேடுவோர்களை மதிப்பீடு செய்யும் புதிய முறையை விளக்குகிறது.
அந்த பதிவில், அவர் தனது நேர்காணல்களை ஆரம்பிக்கும் போது அவர்களிடம் இங்கு வருவதில் உங்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டதா?" என்று கேட்பதாக தெரிவித்துள்ளார். வழக்கமாக, நேர்காணல்களில் வேலை தேட வருபவர்களின் கல்வி, அனுபவம், திறன்கள் மற்றும் தொழில்துறையைப் பற்றிய கேள்விகள் கேட்கப்படுவதுதான் வழக்கம். ஆனால், ஹரித் நாக்பால் கேட்ட இந்த கேள்வி வேட்பாளர்களை சிந்திக்க வைக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இந்த கேள்வியின் மூலம், அவர் வேலை தேடி வருவோர்கள் மனநிலை, சிந்தனை முறை மற்றும் சவால்களை எதிர்கொள்வதற்கான மனப்பான்மை ஆகியவற்றை மதிப்பீடு செய்துள்ளார்.

அதன்படி, வேலை தேடி வருவோர்கள் குழிகள், போக்குவரத்து நெரிசல்கள், மழை போன்றவற்றைப் பட்டியலிட்டவர்கள் என்னை முதலில் இழந்துவிடுகிறார்கள். ஆனால் சுவாரஸ்யமான அனுபவத்தைப் பகிர்ந்தவர்கள் என் பார்வையில் நல்லவராக கருதப்படுகிறார்கள். அதாவது, சிலர் குறைகளை மட்டுமே கூறுவார்கள், ஆனால் சிலர் தங்கள் அனுபவத்தைச் சுவாரஸ்யமாக, நேர்மறையாக விவரிக்க முயலுவார்கள். இதுவே அவர்களின் நிறுவனத்திற்குத் தேவையான ஆளுமைத் தன்மை உள்ளவர்களா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள உதவும் என்று கூறியுள்ளார்.
போட்டியாளர்கள், பொருளாதாரம், வானிலை போன்றவை எங்களின் கட்டுப்பாட்டில் இல்லை. இதை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் என்பது முக்கியம். நீங்கள் சிரிப்போடு இந்த சவால்களை சமாளிக்கிறீர்களா?" என்றும் அவர் கேட்டுள்ளார். இதன் மூலம் அவர், வேலை தேடுவோர்களின் நேர்மறை எண்ணம், தன்னம்பிக்கை மற்றும் சவால்களை சமாளிக்கும் திறனை கணித்துள்ளார்.
இந்த பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பின், பலரும் நாக்பாலின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்தனர், ஆனால் சிலர் இதை தவறான அணுகுமுறை என்று விமர்சித்தனர். ஒரு பயனர், இது ஒரு புதுமையான அணுகுமுறை என நினைக்கிறேன், ஆனால் இதனால் சில முக்கியமான திறமைகள் புறக்கணிக்கப்படலாம் என்று கூறினார். மற்றொரு பயனர், நமது பயணத்தில் வெளிப்புற காரணிகள் பல பக்க விளைவுகளை ஏற்படுத்த முடியும், ஆனால் மனநிலையை எவ்வாறு பராமரிப்பது முக்கியம் என்று தெரிவித்தார்.
இது நிறுவனத்தின் பண்புக்கு ஏற்ப, வேலை தேடுவோர்கள் தனிப்பட்ட நெருக்கடியை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதைக் கணிக்க உதவும். குறிப்பாக கிரியேட்டிவ் மற்றும் டினாமிக் (Creative & Dynamic) பணியிடங்களில், பணியாளர்கள் புதிய சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். இந்த கேள்வி, அவர்களின் சிந்தனை முறையை ஆய்வு செய்ய ஒரு சிறந்த வழியாக இருக்கலாம்.
டாடா ப்ளே நிறுவனம், தனது நேர்காணல்களில் இந்த புதிய அணுகுமுறையை கொண்டு, வேலை தேடுவோர்களின் சிந்தனை மற்றும் மனநிலையை புரிந்து கொள்ள முயற்சிக்கிறது. இது, சவால்களை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை மதிப்பிடுவதில் உதவுகிறது. இந்த முறையைப் பின்பற்றி, சிரமங்களை எதிர்கொள்வதில் எவ்வாறு சிந்திக்கின்றனர் என்பதையும், அதிலிருந்து அவர்கள் எப்படி வெற்றி பெறுவதை கணிக்க முடிகின்றது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications