இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா குழுமம் அடுத்தடுத்து பல துறையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் வேளையில் சென்னை, ஓசூர், கோயம்புத்தூர் தாண்டி தற்போது திருச்சியில் மாபெரும் முதலீட்டை செய்ய முடிவு செய்துள்ளது.
டாடா குழுமம் பல மாதங்களாக தனது புதிய உற்பத்தி தளத்திற்கு நிலத்தை தேடி வந்த நிலையில் தற்போது திருச்சி-க்கு அருகே உள்ள மணப்பாறை சிப்காட் பகுதியில் சுமார் 283.86 ஏக்கர் நிலம் டாடா ப்ராஜெக்ட்க்ஸ்-க்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

TATA Projects நிறுவனம் பலரும் கேள்விபட்டிராத ஒரு நிறுவனமாக இருந்தாலும், டாடா குழுமத்தின் உற்பத்தி துறை வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பது இந்த நிறுவனம் தான். TATA Projects என்பது ஒரு EPC நிறுவனம் அதாவது engineering, procurement and construction நிறுவனமாகும்.
டாடா குழுமத்திற்கு தேவையான உற்பத்தி தளத்தின் கட்டுமானம், மெஷின்களை உரிய இடத்தில் அமைப்பது வரையில் அனைத்து பணிகளையும் இந்த TATA Projects நிறுவனம் செய்கிறது. உதாரணமாக ஓசூரில் தற்போது பிராம்மாண்டமாக இயங்கும் ஐபோன் தொழிற்சாலை கட்டமைப்பு TATA Projects உருவாக்கியது தான்.
அந்த வகையில் தற்போது TATA Projects மணப்பாறை SIPCOT-ல் 283.86 ஏக்கர் நிலத்தை பெற்றுள்ள நிலையில் இந்த இடத்தில் நீண்ட காலமாக எதிர்பார்த்துக்கொண்டு இருந்த செமிகண்டக்டர் சிப்-ன் OSAT தொழிற்சாலை வர உள்ளதா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
மணப்பாறை SIPCOT மொத்தம் 1077 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது, இதில் நான்கில் ஒரு பங்கு நிலத்தை டாடா ப்ராஜெக்ட்ஸ் கைப்பற்றியிருக்கும் வேளையில், அடுத்தாக 101 ஏக்கர் நிலத்தை TIDCO-வின் ஏரோஸ்பேஸ் மற்றும் டிபென்ஸ் பார்க் அமைக்க ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்து Entellus இன்டஸ்ட்ரீஸ்-க்கு 6.01 ஏக்கர், SIDCO-விற்கு 83.44 ஏக்கர், Muralya dairy-க்கு 6 ஏக்கர், RAR இன்டஸ்ட்ரியல் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பார்க்-கிற்கு 28.36 ஏக்கர் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதே பகுதியில் உழவர் சந்தை அமைக்க 2.51 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ரெசிடென்ஷியல் பகுதியாக 10.86 ஏக்கர் ஒதுக்கப்பட்டு உள்ளது.
மேலும் இப்பகுதியில் தனியாருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தின் விலை 57 லட்சம் ரூபாயில் இருந்து 77 லட்சம் ரூபாயாக உயர்ந்துப்பட்டு உள்ளதாகவும், மணப்பாறை SIPCOT-ல் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தின் வரைப்படத்தையும் டிவிட்டரில் திருச்சி அப்டேட்ஸ் வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications