சென்னையின் இந்தியாவின் மேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நகரமாக மட்டும் அல்லாமல் ஐடி, டெக், கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு மிகவும் பிடித்த நகரமாக உருவெடுத்துள்ள நிலையில், அலுவலக இடங்களுக்கான தேவை பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக தனியார் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் சென்னையின் முக்கிய பகுதிகளில் டெக் பார்க்களை கட்டி வருகிறது, 15க்கும் அதிகமான அலுவலக திட்டங்கள் சென்னையில் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. இதன் வரிசையில் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மாறும் ரியல் எஸ்டேட் நிறுவனமான ஆர்எம்ஜி நிறுவனம் RMZ Infinity என்ற திட்டத்தை செயின்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் பூந்தமல்லி சாலையில் கட்ட திட்டமிட்டு உள்ளது.

இந்த மாபெரும் கட்டுமான திட்டத்தை டாடா குழுமத்தின் முக்கிய கட்டுமான பிரிவான டாடா ப்ராஜெக்ட்ஸ் பெற்றுள்ளது. RMZ Infinity திட்டம் சுமார் 16.4 ஏக்கர் நிலத்தில் கிரேட் ஏ தரத்திலான அலுவலக இடத்தை டாடா ப்ராஜெக்ட்ஸ் சுமார் 670 கோடி ரூபாய் செலவில் கட்ட உள்ளது.
இந்த திட்டம் கட்டி முடிக்கப்படும் போது சென்னையில் புதிதாக 30 லட்சம் சதுரடி அளவிலான அலுவலக இடம் பயன்பாட்டுக்கு வரும். சென்னையில் உருவாகியிருக்கும் அலுவலக இடத்திற்கான டிமாண்டில் இந்த ஐடி பார்க் கட்டாயம் சிறிய அளவிலாவது பூர்த்தி செய்யும்.
இந்த புதிய டெக் பார்க்கில் ஊழியர்களை சமூக பயன்பாட்டுக்காக மட்டும் சுமார் 1,00,000 சதுரடி அளவிலான இடம் உருவாகப்பட உள்ளதாக அறிவிகப்பட்டு உள்ளது.

இந்தியாவில் தற்போது அதிகளவிலான ஜிசிசி அலுவலகங்கள் வர துவங்கியிருக்கும் வேளையில் ஒவ்வொரு நிறுவனமும் வெறும் அலுவலக இடத்தை மட்டும் தேர்வு செய்யாமல் பொழுதுபோக்கு இடம், புட் கோர்ட், ஜிம், கோ வொர்கிங் ஸ்பேஸ், பெரிய அளவிலான கான்பிரென்ஸ் ரூம் போன்ற பல விஷயங்களை எதிர்பார்க்கிறது. இதனால் ஒவ்வொரு டெக் பார்க்கும் மிகுந்த திட்டமிடலுக்கு பின்பு கட்டுமானத்தை துவங்கி வருகிறது.
இதேபோல் RMZ Infinity சென்னையின் மிகவும் முக்கிய இடத்திற்கு அருகில் அமைகிறது,சென்னை விமான நிலையம், கிண்டி பிஸ்னஸ் டிஸ்ட்ரிக், போரூர், ஐடி காரிடார், மெட்ரோ ரயில் நெட்வொர்க், தேசிய நெடுஞ்சாலை என பல முக்கியமான பகுதிகளுக்கு மத்தியில் அமைகிறது.
மேலும் டாடா ப்ராஜெட்ஸ் நிறுவனம் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் கமர்சியல் கட்டுமான நிறுவனமான உருவெடுத்துள்ளது. அலுவலக இடம், டேட்டா சென்டர், உற்பத்தி ஆலைகள் என பலவற்றை செயல்படுத்தும் முக்கியமான EPC நிறுவனமாக உள்ளது.
டாடா ப்ராஜெட்ஸ் 1979ல் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் என்றாலும் சமீபத்தில் டாடா எலக்ட்ரானிக்ஸ், தீபக் பெட்ரோகெமிக்கல், இஸ்ரோ என பல அரசு மற்றும் தனியார் நிறுவன திட்டங்களை செயல்படுத்தி வரும் காரணத்தால் பிரபலமாகி வருகிறது.


Click it and Unblock the Notifications

