வந்தாச்சு டாடா பஞ்ச் EV ஃபேஸ்லிஃப்ட்.. விலையை கேட்டா, வீட்டுக்கு ஒன்னு வாங்கலாம் போலியே..!!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா மோட்டார்ஸ் மிகப்பெரிய அளவிலான கம்பேக் கொடுத்திருக்கும் வேளையில், மாருதி சுசூகியின் ஆஸ்தான கோட்டையான காம்பேக்ட் கார் பிரிவில் டாடா பஞ்ச் கார் மூலம் பெரும் வர்த்தக சந்தையை கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் டாடா மோட்டார்ஸ் தனது புதிய பலமாக மாறி வரும் EV பிரிவிலும் டாடா பஞ்ச் மேஜிக்-ஐ கொண்டு வர புதிய டாடா பஞ்ச் EV ஃபேஸ்லிஃப்ட் 2026-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

டாடா பஞ்ச் கார் அறிமுகம் செய்த நாளில் இருந்து மிகப்பெரிய அளவிலான அப்டேட் செய்யப்பட்ட கார் என்பதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. புதிய டாடா பஞ்ச் EV ஃபேஸ்லிஃப்ட் 2026 இன்று அறிமுகம் செய்யப்பட்ட கையோடு புக்கிங் தொடங்கியுள்ளது டாடா மோட்டார்ஸ், விரைவில் டெலிவரியும் தொடங்கும்.

வந்தாச்சு டாடா பஞ்ச் EV ஃபேஸ்லிஃப்ட்.. விலையை கேட்டா, வீட்டுக்கு ஒன்னு வாங்கலாம் போலியே..!!

ஆயுள் முழுவதும் பேட்டரி வாரண்டி
இந்தியாவில் முதல் முறை, புதிய பஞ்ச் EV காரை வாங்கும் முதல் உரிமையாளருக்கு ஆயுள் முழுவதும் அன்லிமிடெட் கிலோமீட்டர் பேட்டரி வாரண்டி வழங்குகிறது டாடா மோட்டார்ஸ். இதன் மூலம் காம்பேக்ட் கார் வாங்கும் மக்களுக்கு ஈவி காரின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

இது இந்திய ஆட்டோமொபைல் துறையில் ஆயுள் முழுவதும் பேட்டரி வாரண்டி அளிப்பது முதல் முறையாகும்.

பேட்டரி மற்றும் சார்ஜிங் விவரங்கள்
புதிய பஞ்ச் EV காரில் LFP பிரிஸ்மாடிக் செல் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பாதுகாப்பு மற்றும் ஆயுள் ஆகியவற்றில் சிறந்தது என அறியப்படுகிறது. மேலும் இந்த கார் 3 சார்ஜிங் வசதிகளுடன் வருகிறது கூடுதல் சிறப்பு அம்சமாகும்.

DC ஃபாஸ்ட் சார்ஜர் (CCS2)
7.2kW வால்பாக்ஸ் சார்ஜர்
3.3kW ஹோம் சார்ஜர்

பேட்டரி ரேஞ்ச்
புதிய பஞ்ச் EV காரில் 40kWh பேட்டரி பேக் உள்ளது. ARAI டெஸ்டிங் படி இக்காரின் முழு சார்ஜிங் மூலம் 468 கிமீ மைலேஜ் / ரேஞ்ச் அளிக்கிறது. ஆனால் சாலையில் ஓட்டும்போது இதன் ரேஞ்ச் சுமார் 355 கிமீ ஆக உள்ளது என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

வந்தாச்சு டாடா பஞ்ச் EV ஃபேஸ்லிஃப்ட்.. விலையை கேட்டா, வீட்டுக்கு ஒன்னு வாங்கலாம் போலியே..!!

சார்ஜிங் வேகம்
புதிய பஞ்ச் EV காரின் பேட்டரி 20%லிருந்து 80% வரையில் சார்ஜிங் செய்ய 26 நிமிடங்களில் அடையும். 15 நிமிட சார்ஜிங் செய்தால் சுமார் 135 கிமீ ரேஞ்ச் தருகிறது. இது தினசரி பயன்பாட்டுக்கு விரைவான சார்ஜிங் மற்றும் சிறப்பான மைலேஜ் கிடைக்கும் காரணத்தால் பெரு நகரங்களுக்கு இது சிறந்த தேர்வாக மாறும்.

முக்கிய அம்சங்கள் - புதிய பஞ்ச் EV-யில் 6 ஏர்பேக்ஸ், 6 நிறங்கள், ஸ்மார்ட் டிடெக்ஷன் சிஸ்டம் போன்ற அம்சங்கள் உள்ளன.

விலை விவரங்கள்
புதிய பஞ்ச் EV காரின் எக்ஸ்-ஷோரூம் தொடக்க விலை ரூ.9.69 லட்சம் ஆக அறிவித்துள்ளது டாடா மோட்டார்ஸ்.

மேலும் டாடா மோட்டார்ஸ் வழங்கும் BaaS (Battery as a Service) விருப்பத்தில் இந்த கார் ரூ.6.49 லட்சத்தில் தொடங்குகிறது, பேட்டரி கட்டணமாக ஒரு கிலோமீட்டருக்கு ரூ.2.6 வசூலிக்கப்படுகிறது. BAAS திட்டம் மூலம் ஆரம்ப முதலீட்டு அளவுகளை குறைக்கிறது.

BAAS திட்டத்தின் விலையை பார்க்கும் போது முதல் முறையாக கார் வாங்குவோருக்கும், பட்ஜெட் விலையில் கார் வாங்குவோருக்கும் ஏற்றதாக இருக்கும்.

மொத்தத்தில், டாடா பஞ்ச் EV ஃபேஸ்லிஃப்ட் 2026 எலக்ட்ரிக் வாகன துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயுள்கால பேட்டரி வாரண்டி, விரைவான சார்ஜிங், மேம்பட்ட பாதுகாப்பு, குறைவான விலை ஆகியவை மிடில் கிளாஸ் மக்களுக்கு ஏற்றதாகவும், நம்பகமானதாகவும் மாற்றியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+