பட்ஜெட் விலையில் sunroof உடன் புது காரை அறிமுகம் செய்த TATA.. பயங்கரமா இருக்கே..!!

டாடா மோட்டார்ஸ் கடந்த 5 வருடத்தில் இந்திய மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை பெற்றுள்ளது, அடுத்தடுத்து புதிய கார்களை அறிமுகம் செய்து அதன் வாடிக்கையாளர்களை பிரம்மிக்க வைத்து வருகிறது. சமீபத்தில் வெளியான டாடா சியாரா கார் மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை பெற்றது. இந்த நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பில்ட் குவாலிட்டிக்கு பெயர் போன டாடா பன்ச் மாடலின் புதிய வடிவத்தை இன்று அறிமுகம் செய்து.

டாடா மோட்டார்ஸ் தனது பிரபலமான B-SUV மாடலான பன்ச்-ன் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்து அதன் விலையை இன்று அறிவித்துள்ளது. டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையில் ரூ.5.59 லட்சத்தில் தொடங்கும் இந்த கார், புதிய டிசைன், ஏகப்பட்ட வசதிகள் மற்றும் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆகியவற்றுடன் வந்துள்ளது.

பட்ஜெட் விலையில் sunroof உடன் புது காரை அறிமுகம் செய்த TATA.. பயங்கரமா இருக்கே..!!

இதன் மூலம் இந்திய ஆட்டோமொபைல சந்தையில் குறைந்த விலையில் அதிக ஃபீச்சர்கள் கொண்ட பட்ஜெட் காராக Tata Punch Facelift 2026 இருக்கும். இந்த காரின் அறிமுகம் மூலம் சிறிய கார்களுக்கு பெயர்போன மாருதி சுசூகியின் வர்த்தகம் பாதிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் டாடா மோட்டார்ஸ் பங்கு விலை 0.60 சதவீதம் குறைந்து 348.40 ரூபாயாக உள்ளது, இதேபோலே மாருதி சுசூகி பங்குகள் 1.10 சதவீதம் சரிந்து 16,400 ரூபாயாக உள்ளது. இன்று காலை முதல் மொத்தமாக மும்பை பங்குச்சந்தை சரிவில் இருக்கும் காரணத்தால் ஆட்டோமொபைல் துறை பாதிக்கப்பட்டு உள்ளது.

புதிய எஞ்சின் அறிமுகம்
பன்ச் ஃபேஸ்லிஃப்ட் கார் இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களுடன் வந்துள்ளது.

புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 118 பிஎச்பி பவர் மற்றும் 170 Nm டார்க் தருகிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 0-100 கிமீ வேகத்தை 11.1 வினாடிகளில் எட்டும் என்று நிறுவனம் கூறுகிறது. பவர்-டூ-வெயிட் ரேஷியோ 105 PS per tonne ஆக உள்ளது.

பழைய 1.2 லிட்டர் NA எஞ்சின் 87 பிஎச்பி மற்றும் 115 Nm தருகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT ஆப்ஷன்களுடன் வருகிறது.

விலை நிலவரம்
பன்ச் ஃபேஸ்லிஃப்ட் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது: Smart, Pure, Pure Plus, Adventure, Accomplished, Accomplished Plus.

பெட்ரோல் மாடல்களின் விலை:
Smart MT: ரூ.5.59 லட்சம்
Pure MT: ரூ.6.49 லட்சம்
Pure Plus MT: ரூ.6.99 லட்சம்
Adventure MT: ரூ.7.59 லட்சம்
Accomplished MT: ரூ.8.29 லட்சம்
Accomplished Plus S MT: ரூ.8.99 லட்சம்

டர்போ பெட்ரோல் வேரியண்ட்கள்:
Adventure MT: ரூ.8.29 லட்சம்
Accomplished Plus S MT: ரூ.9.79 லட்சம்

பட்ஜெட் விலையில் sunroof உடன் புது காரை அறிமுகம் செய்த TATA.. பயங்கரமா இருக்கே..!!

CNG மாடல்களின் விலை:
Smart MT: ரூ.6.69 லட்சம்
Pure MT: ரூ.7.49 லட்சம்
Pure Plus MT: ரூ.7.99 லட்சம்
Adventure MT: ரூ.8.59 லட்சம்
Accomplished MT: ரூ.9.29 லட்சம்
Accomplished Plus S MT: ரூ.10.54 லட்சம்

ஆட்டோமேட்டிக் பெட்ரோல் மாடல் விலை விபரம்:
Pure Plus AMT: ரூ.7.54 லட்சம்
Adventure AMT: ரூ.8.14 லட்சம்
Accomplished AMT: ரூ.8.84 லட்சம்
Accomplished Plus S AMT: ரூ.9.54 லட்சம்

ஆட்டோமேட்டிக் CNG மாடல் விலை விபரம்:
Pure Plus AMT: ரூ.8.54 லட்சம்
Adventure AMT: ரூ.9.14 லட்சம்
Accomplished Plus S AMT: ரூ.10.54 லட்சம்

சில Pure Plus, Adventure மாடல்களுக்கு சன்ரூப் கூடுதல் ஆப்ஷன் ஆக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு 35000 ரூபாய் கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டும்

பாதுகாப்பு அம்சங்களில் 6 ஏர்பேக்ஸ் (அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்ட்), ESC, ABS, TPMS, 360 டிகிரி கேமரா, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை உள்ளன. இந்த கார் பாரத் NCAP-இல் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது.

பட்ஜெட் விலையில் sunroof உடன் புது காரை அறிமுகம் செய்த TATA.. பயங்கரமா இருக்கே..!!

இன்டீரியர் முக்கிய அம்சங்களில் வயர்லெஸ் சார்ஜர், வாய்ஸ் அசிஸ்டட் எலக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோ-டிம்மிங் IRVM, LED ஃபாக் லைட்ஸ் கார்னரிங் ஃபங்ஷன், 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன், எக்ஸ்டெண்டட் தை சப்போர்ட் சீட்ஸ், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், டைப்-C சார்ஜிங் போர்ட்கள், வயர்லெஸ் ஆப்பிள் கார்-ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, டிரைவ் மோட்ஸ் ஆகியவை உள்ளன.

பெட்ரோல் வேரியண்ட் கார்களில் 366 லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளது, இப்பிரிவில் இந்த அளவு மிகவும் அதிகமானது. CNG வேரியண்ட்களில் 210 லிட்டர் உள்ளது. டாடா பன்ச் பேஸ்லிப்ட் கார் 6 வண்ணங்களில் கிடைக்கிறது.

கார் என்பது தற்போது ஆடம்பரம் என்பதை தாண்டி அத்தியாவசியமானதாக மாறியிருக்கும் வேளையிலும், கார் வாங்குவது என்பது மிகப்பெரிய நிதியியல் முடிவு என்பதால் மிகவும் கவனமாக செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே காரின் அறிமுகத்தில் விலை, வசதிகள் போன்றவற்றை பார்த்து மட்டும் ஒரு காரை வாங்க முடிவு செய்யாதீப்கள். காரை டெஸ்ட் டிரைவ் செய்து நிபுணர்களின் அறிவுரை பெற்ற பின்பு முடிவு செய்வது தான் உத்தமம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+