அடுத்தடுத்து புதிய கார்.. போட்டியை சமாளிக்க புது உக்தி.. அசத்தும் டாடா..!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடுமையான போட்டி உருவாகியுள்ள நிலையில் அனைத்து முன்னணி நிறுவனம் தனது வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்களைக் காப்பாற்றிக்கொள்ளவும், அதே நேரத்தில் புதிய வாடிக்கையாளர்களைப் பெற வேண்டும் என்ற நோக்கில் பல மாற்றங்களைச் செய்து வருகின்றனர்.

இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தயாரிக்கும் கார்களின் தரம் கடந்த சில வருடங்களில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்கு ஏற்றார் போல் விலை கடுமையாக உயரும் என்று எதிர்பார்த்தால் போட்டியின் காரணமாக விலையும் குறைக்கப்பட்டு உள்ளது. இவ்விரண்டுக்கும் சரியான உதாரணம் மஹிந்திராவின் புதிய XUV 700.

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ்

இந்தச் சூழ்நிலையில், டாடா இந்தியச் சந்தையில் இதுநாள் அடைந்திடாத வளர்ச்சியை அடைய வேண்டும் என்றும், அனைத்து தரப்பினருக்குமான கார்களை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்துடன் கடந்த 2 வருடத்தில் புதிதாகவும், புதுப்பிக்கப்பட்ட கார்களாகவும் சுமார் 6 கார்களை (Tiago, Altroz, Tigor, Safari, Nexon, Harrier) வெளியிட்ட டாடா மோட்டார்ஸ், இந்த வருடத் தீபாவளி பண்டிகைக்குப் புதிதாக ஒரு காரை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

மினி எஸ்யூவி கார்

மினி எஸ்யூவி கார்

இந்தியாவில் தற்போது புதிய டிரெண்டாக மாறியுள்ள மினி அல்லது காம்பெக்ச் எஸ்யூவி பிரிவில் டாடா மோட்டார்ஸ் தீபாவளி பண்டிகையின் போது பன்ச் (TATA PUNCH) என்ற புதிய மினி எஸ்யூவி காரை அறிமுகம் செய்ய உள்ளது.

டாடா பன்ச் கார்

டாடா பன்ச் கார்

2020 ஆட்டோ எக்ஸ்போ-வில் H2X கான்செப்ட் கார் அடிப்படையில் இந்த டாடா பன்ச் உருவாக்கப்பட்டுத் தீபாவளி பண்டிகையின் போது வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது. பெயரிலேயே பன்ச் இருக்கும் காரணத்தால் சக்தி வாய்ந்த காராக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெக்சான் வரிசையில் டாடா பன்ச் கார்

நெக்சான் வரிசையில் டாடா பன்ச் கார்

டாடா சமீபத்தில் வெளியிட்ட நெக்சான் கார் சந்தையில் பெரும் புரட்சியைச் செய்த நிலையில், அதன் வரிசையில் தற்போது டாடா பன்ச் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கார் அனைத்து தரப்பினரும் வாங்கும் விலையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. உண்மையைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

மக்களுக்கு லாபம்

மக்களுக்கு லாபம்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க வர்த்தகத்தைப் பெற்றுள்ள வேளையில், தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தவும், வாடிக்கையாளர்களைத் தக்க வைக்கவும் கார்களின் விலையைக் குறைத்தும், அதன் தரத்தை அதிகரிக்கும் வருகிறது இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள். இது மக்களுக்கு லாபம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+