நீலசல் இஸ்பட் நிகாம் லிமிடெட்- NINL ஒரிசா அரசு ஸ்டீல் நிறுவனமாகும். மூன்று ஆண்டுகளாகச் செயல்படாமல் பூட்டிக் கிடந்தது. 2,500 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த நீலசல் இஸ்பட் நிகாம் லிமிடெட் வளாகத்தில் புதர்கள் மண்டியதால் பாம்புகளும், தேள்களும் அங்கு பெருகிவிட்டன. இயந்திரங்கள் துருப்பிடித்து விட்டன.
இந்த நிலையில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் முன்னாள் துணை நிறுவனமான டாடா ஸ்டீல் லாங் புராடக்ட்ஸ் மூலம் ரூ.12,100 செலுத்தி டாடா குழுமம் வாங்கியது. Neelachal Ispat Nigam Limited தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த முதல் தனியார்மயமாக்கல் என்ற பெருமையை பெற்றது.

என்ஐஎன்எல்-ஐ வாங்கியதும் விரிவான திட்டம் தீட்டப்பட்டு நிறுவன வளாகம் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டது. அங்குள்ள அலுவலகங்கள் மற்றும் கட்டடங்கள் அனைத்தும் செப்பணிடப்பட்டு பிராட் பேண்டு இணைப்பு தரப்பட்டது.
கையகப்படுத்துதல் ஒப்பந்தத்தின்படி இந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு ஒரு மாதச் சம்பளம் முழுவதுமாகத் தரப்பட்டது.
இதைத் தொடர்ந்து 90 நாள் மீட்புத் திட்டத்தின்படி ரூ.250 கோடி முதலீடு செய்யப்பட்டது. கடனில் மூழ்கி எதிர்காலம் இருண்டிருந்த வேளையில் அதை திறம்பட நிர்வகித்ததன் மூலம் கடந்த ஆண்டில் கையகப்படுத்தியதில் இருந்து இதுவரை ரூ.4600 கோடி வருவாயை என்ஐஎன்எல் பெற்றுள்ளது.

டாடா குரூப்பின் செயல்பாட்டின் மூலம் நிறுவனத்துக்கு இருந்த சவால்கள் களையப்பட்டு 100 சதவீதத் திறனுடன் இயங்குவதாக என்ஐஎன்எல் நிறுவன நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ சுதிர்குமார் மேத்தா கூறினார்.
90 நாட்கள் கெடு இருந்த நிலையில் டாடாவின் நிபுணர்கள் என்ஐஎன்எல் நிறுவனத்துக்குள் அடியெடுத்து வைத்தனர். எங்கு பார்த்தாலும் கட்டடங்கள் பாழடைந்தும், ஏராளமான புதர்கள் மண்டி பாம்புகளும், தேள்களும் உலவியதைப் பார்த்தனர்.
இதைத் தொடர்ந்து நிறுவன வளாகம் முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டது.
அரசு பொறுப்பில் இருந்தபோது பணியாற்றிய ஊழியர்களுக்கு இழப்பீடாக ஒரு மாதச் சம்பளத்தை டாடா நிறுவனம் தந்தது. என்ஐஎன்எல் நிறுவனத்தின் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 10 லட்சம் டன் ஸ்டீல் தயாரிக்கும் வசதியைக் கொண்டுள்ளது.
களிங்க நகர், ஜாம்ஷெட்பூர், மேராமண்டலியில் உள்ள டாடா ஸ்டீல் நிறுவனத் தொழில்நுட்ப மற்றும் மெக்கானிக்கல் நிபுணர்கள் NINL-ல் உள்ள பிளாஸ்ட் ஃபர்னஸ்களை மீண்டும் இயக்குவதற்காக கடுமையாக உழைத்தனர்.
என்ஐஎன்எல் நிறுவனத்தில் 1400 ஊழியர்களுக்கு மீண்டும் வேலை கிடைத்தது. அதன் கட்டுமானங்கள் மற்றும் ஊழியர்கள் திறன் மேம்பாட்டுக்காகவும் பெண் ஊழியர்களின் குழந்தைகள் காப்பகத்துக்காகவும், பல்வேறு ஊழியர் நல திட்டங்களுக்கும் டாடா குழுமம் ரூ.250 கோடியை செலவழித்தது.
2022 அக்டோபர் முதல் 2023 மார்ச் மாதம் வரை நிறுவனத்தின் வருவாய் ரூ.1600 கோடியாக இருந்தது. இது 2023 ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் ரூ.3000 கோடியாக ஆனது. டாடா குழுமத்தின் மிக முக்கியமான அங்கமாக என்ஐஎன்எல் உருவெடுக்கும் என்று அதன் சிஇஓ நரேந்திரன் கூறினார்.


Click it and Unblock the Notifications