ஏர் இந்தியா ஒரு வருட வெற்றி.. 500 புதிய விமானம்.. மாபெரும் அறிவிப்பு.. இனி தொடர் ஏறுமுகம் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அரசிடம் இருந்து டாடா குழுமம் ஏர்இந்தியா நிறுவனத்தை வாங்கிய பின்பு தொடர் மாற்றங்கள் தொடர்ந்து ஏர் இந்திய விமானத்தில் ஒருவர் சக பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம் மூலம் அதன் பிராண்டு மதிப்பில் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

 

இதோடு 10 லட்சம் அபராதம் பெற்றதைத் தொடர்ந்து ஏர் இந்தியா நிர்வாக விமானத்தில் மதுபானம் வழங்கும் கொள்கையில் முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

இதற்கிடையில் மீண்டும் வாடிக்கையாளர்களை ஈர்க்க விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியாவில் தள்ளுபடி விற்பனையை அறிவித்துத் தனது பிராண்டு மதிப்பை மீண்டும் உயர்த்திக்கொண்டது.

ஏர் இந்தியாவில் பிரம்மாண்ட தள்ளுபடி.. இன்றே கடைசி..! ஏர் இந்தியாவில் பிரம்மாண்ட தள்ளுபடி.. இன்றே கடைசி..!

500 புதிய விமானம்

500 புதிய விமானம்

இந்த நிலையில் ஏர் இந்தியா நிர்வாகம் மீண்டும் தனது வளர்ச்சி திட்டங்கள் மீது கவனத்தைச் செலுத்து துவங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஏர் இந்தியா புதிய விமானங்களை வாங்குவதற்கான ஆர்டரை உறுதி செய்துள்ளது.

டாடா குழுமம்

டாடா குழுமம்

டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் வேகமாக வளர்ந்து வரும் ஏர் இந்தியா நிர்வாகம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் அதிக எண்ணிக்கையிலும், அதிக வழித்தடத்திலும் சேவை அளிக்க வேண்டும் என்பதற்காகப் புதிதாக விமானங்களை வாங்க முடிவு செய்தது.

ஏர் இந்தியா
 

ஏர் இந்தியா

மத்திய அரசிடம் இருந்து ஏர் இந்தியாவைக் கைப்பற்றி ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில் ஏர் இந்திய தலைவர் Campbell Wilson கடந்த 12 மாதங்களில் ஏர் இந்தியா நிறுவனத்தின் முன்னேற்றம் பிரமிக்க வைக்கும் அளவில் உள்ளது.

முதல் ஆண்டு

முதல் ஆண்டு


டாடா குழுமம் ஏர் இந்தியாவைக் கையகப்படுத்தி முதல் ஆண்டை நிறைவு செய்யும் வேளையில் இன்னும் நிறையச் செய்ய விஷயங்கள் ஏர் இந்தியாவில் உள்ளது எனக் கேம்ப்பெல் வில்சன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

எதிர்கால வளர்ச்சி

எதிர்கால வளர்ச்சி

கடந்த ஒரு வருடத்தில் ஏர் இந்தியாவில் எடுக்கப்பட்ட முயற்சிகளின், முக்கியப் பகுதியாக ஏர் இந்தியா தனது எதிர்கால வளர்ச்சிக்காக வரலாற்று காணாத வகையில் புதிய விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை இறுதி செய்ய உள்ளது எனக் கேம்ப்பெல் வில்சன் தெரிவித்தார்.

495 போயிங் ஜெட்

495 போயிங் ஜெட்

இதைத் தொடர்ந்து விமானத் தயாரிப்பு நிறுவனங்களான போயிங் மற்றும் ஏர்பஸ் ஆகியவற்றுடன் பல நாடுகளாகப் பேசி வருகிறது. இதைத் தொடர்ந்து ஏர் இந்தியா தப்போது பல பில்லியன் டாலர் மதிப்பிலான 495 போயிங் ஜெட், ஜெனரல் எலக்ட்ரிக் மற்றும் CFM இண்டர்நேஷ்னல் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து இன்ஜின் ஆகியவற்றைப் பெற்ற ஒப்பந்தம் செய்துள்ளது.

போயிங் நிறுவனம்

போயிங் நிறுவனம்

ஏர் இந்தியாவைக் கைப்பற்றி ஒரு வருடம் முழுமையாக முடிந்த நிலையில் டாடா குரூப் போயிங் நிறுவனத்திடம் இருந்து 190 737மேக்ஸ் விமானங்கள், 20 787விமானங்கள், 10 777எக்ஸ் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏர்பஸ் விமான நிறுவனம்

ஏர்பஸ் விமான நிறுவனம்

இதுமட்டும் அல்லாமல் அடுத்தக் கட்ட திட்டத்திற்கு ஏர்பஸ் விமானத் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து 235 சிங்கிள் அசைல் ஜெட்ஸ், 40 ஏ350 வையிட்பாடி விமானங்களை வாங்குவது குறித்து ஒப்பந்தத்தை அடுத்தச் சில நாட்களில் செய்ய உள்ளது.

இன்று கையெழுத்து

இன்று கையெழுத்து

இதில் முதல் கட்டமாக ஏர் இந்தியா இன்று போயிங், ஜெனரல் எலக்ட்ரிக் மற்றும் CFM இண்டர்நேஷ்னல் ஆகியவற்றுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata's Air India buying 500 planes from boeing; CEO Campbell Wilson says stunning growth

Tata's Air India buying 500 planes from Boeing; CEO Campbell Wilson says stunning growth
Story first published: Friday, January 27, 2023, 14:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X