இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் புதிய முதலீடுகளை ஈர்த்து, அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதில் குறியாய் உள்ளது, இதில் பெரும் போட்டியே உருவாகியுள்ளது. குறிப்பாக தென்னிந்த மாநிலங்கள் எப்போதும் இல்லாமல் புதிய முதலீடுகளை பெறுவதற்கு போட்டா போட்டிப்போடு வருகிறது. சிறிய முதலீடாக இருந்தாலும் விடக்கூடாது என்பதில் குறியாய் உள்ளது.
இப்படியிருக்கும் வேளையில் கர்நாடக அரசு ஒரே நாளில் சுமார் 91 தொழிற்துறை முதலீடுகளின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து அசத்தியுள்ளது, ஒரே நாளில் 91 முதலீட்டு ஒப்பந்தங்கள் என்பது பலருக்கும் வியப்பு அளிக்கிறது.

இந்த 91 முதலீட்டு திட்டங்கள் மூலம் கர்நாடக மாநிலத்தில் 7,659.52 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது, இதன் வாயிலாக இம்மாநிலத்தில் 18,146 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது.
கர்நாடக மாநிலத்தின் தொழிற்துறை மற்றும் உள்கட்டமைப்பு துறை மேம்பாட்டு துறை அமைச்சர் எம்பி பாட்டில் தலைமையிலான குழு மாநில அளவிலான ஒற்றை சாளற ஒப்புதல் கீழ் சுமார் 91 முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் சுமார் 26 திட்டங்கள் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீட்டு மதிப்புடையது, இத்தகைய திட்டத்தின் மதிப்பு மட்டும் 5,750.73 கோடி ரூபாய், இதின் மூலம் 13,742 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க முடியும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த 91 முதலீட்டு திட்ட ஒப்புதலில் மாருதி சுசூகி இந்தியா, அக்வஸ் கன்ஸ்யூமர், சௌத் வெஸ்ட் மைனிங், டாடா செமிகண்டக்டர், கிரிப்டான் சொல்யூஷன்ஸ் போன்ற நிறுவனங்களுடையது தான்.
கர்நாடக அமைச்சர் எம்பி பாட்டில் தலைமையிலான கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற முக்கிய முதலீட்டு திட்டங்களில் பிரதிபா பாட்டீல் சுகர் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் விஜயபுரா மாவட்டத்தில் ரூ.489.50 கோடி முதலீட்டில் அமைக்க உள்ள புதிய தொழிற்சாலை தான். இதை தொடர்ந்து ஏக்யூஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் தார்வாட் மாவட்டத்தில் 456 கோடி ரூபாய் செலவில் 3வது யூனிட்-ஐ அமைக்கிறது.
மேலும் டாடா செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் டெஸ்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 200 கோடி முதலீட்டில் கோலாரில் புதிய தளத்தை அமைக்க உள்ளது, இதன் மூலம் 155 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. இதோடு மாருதி சுசூகி பெங்களூருக்கு அருகில் இருக்கும் நீலமங்களா பகுதியில் சுமார் 137.6 கோடி ரூபாய் முதலீடு செய்திகிறது.


Click it and Unblock the Notifications