உலகளவில் தற்போது செமி கண்டக்டர்களுக்கான தேவை அதிகரித்திருக்கிறது. எனவே இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் செமி கண்டக்டர் உற்பத்தியில் தீவிர கவனம் செலுத்துகின்றன. இந்தியாவில் டாடா குழுமத்திற்கு சொந்தமான டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சொந்தமாக செமி கண்டக்டர் உற்பத்தி ஆலை மற்றும் செமி கண்டக்டர் பரிசோதனை ஆலையை நிறுவி இருக்கிறது.
தைவான் நாட்டை சேர்ந்த நிறுவனத்தோடு கூட்டமைப்பு செய்து டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் செமி கண்டக்டர் உற்பத்தியில் கால் பதித்திருக்கிறது. குஜராத்தின் டொலேராவில் இதற்கான ஆலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த செமி கண்டக்டர் ஆலையில் பணிபுரியும் ஊழியர்களை தேர்வு செய்துள்ள டாடா நிறுவனம் அவர்களை தைவானுக்கு பயிற்சிக்காக அனுப்பி வைத்திருப்பதாக எக்னாமிக் டைம் செய்தி வெளியிட்டு இருக்கிறது .

இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்ட ஊழியர்களை டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தைவானுக்கு அனுப்பியுள்ளது. தைவானின் பிஎஸ்எம்சி நிறுவனத்தில் இந்த ஊழியர்கள் தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர். செமி கண்டக்டர் உற்பத்தி மிகவும் நுணுக்கமான தொழில்நுட்பங்களை கொண்ட வேலை. இந்த நுணுக்கமான தொழில்நுட்பத்தில் தைவானை சேர்ந்த நிறுவனங்கள்தான் கைதேர்ந்தவையாக இருக்கின்றன.
எனவே தான் டாடா எலக்ட்ரானிக்ஸ் சிஎஸ்எம்சி நிறுவனத்தோடு கூட்டமைப்பு செய்து தற்போது தங்கள் நிறுவன ஊழியர்களை பயிற்சிக்காக தைவானுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. டொலேராவின் டாடா அமைத்து வரக்கூடிய 91 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான செமி கண்டக்டர் உற்பத்தி ஆலையின் மூலம் நேரடியாக 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட உள்ளது.
அதே போல அசாமில் அமைக்கப்பட்டு வரும் செமி கண்டக்டர் பரிசோதனை ஆலையில் 27 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என சொல்லப்படுகிறது. இந்த ஆலைகளுக்கு தேவையான ஊழியர்களை தான் தற்போது பயிற்சிக்காக டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தைவான் அனுப்பி வைத்திருக்கிறது. ஃபிரஷர்கள் தொடங்கி அனுபவம் வாய்ந்த நபர்கள் வரை பல பிரிவுகளை சேர்ந்த ஊழியர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தான் டொலேராவின் உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது . அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் 2026 டிசம்பர் மாதத்தில் இருந்து முதல் செமி கண்டக்டர் உற்பத்தி செய்யப்பட்டு வெளிவரும் என தெரிவித்திருந்தார். அதேபோல அசாமில் கட்டப்பட்டு வரும் செமி கண் டாக்டர் பரிசோதனை ஆலை இன்னும் சில மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்து விடும் என டாடா நிறுவன உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications