இந்திய ஆட்டோமொபைல் துறையை புரட்டிப்போட்ட எலக்ட்ரிக் கார்கள் இப்போது மலிவான விலைகளிலும் வர துவங்கியுள்ளதால் மக்கள் அதிக ஆர்வத்துடன் வாங்க துவங்கினாலும், பெரும் பகுதி மக்களுக்கு இன்னும் எலக்ட்ரிக் கார்களை வாங்க தயக்கம் உள்ளது.
இதேவேளையில் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை காரணமாக அதிகப்படியான முதலீட்டாளர்கள் இப்போது எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரித்து விற்கும் நிறுவனங்கள் இதை சார்ந்த நிறுவனங்களில் அதிகப்படியான முதலீட்டை செய்து வரும் வேளையில், முதலீட்டாளர்களுக்கும் சைலேஷ் சந்திரா ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

முதலில் யார் இந்த சைலேஷ் சந்திரா என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள், அப்போது தான் இவர் கூறுவது எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். இன்று இந்திய எலக்ட்ரிக் கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னோடியாக இருக்கும் டாடா பேசஞ்சர் எல்க்ட்ரிக் மொபிலிட்டி பிரிவை தலைவர் தான் சைலேஷ் சந்திரா.
தற்போது இந்தியாவில் விற்கப்படும் எலக்ட்ரிக் கார்களில் எவ்விதமான பிரச்சனையும் இல்லை, விலை கூட பிரச்சனையில்லை, பல கார்கள் மிகவும் சிறப்பான செய்திறனை வெளிப்படுத்தி மாஸ்காட்டுகிறது. இதேபோல் எரிபொருள் செலவுகள் இல்லை, மெயின்டனென்ஸ் செலவுகள் இல்லை.
ஆனால் பெரும் பகுதி மக்களை எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதை தடுக்கும் ஒரு முக்கியமான விஷயம் சார்ஜிங் ஸ்டேஷன். குறிப்பாக முதல் கார் வாங்குவோர் மத்தியில் எலக்ட்ரிக் வாங்க அதிக தயக்கம் காட்டுவது சார்ஜிங் பிரச்சனை தான். போதுமான சார்ஜிங் ஸ்டேஷன் இல்லாதது, வேகமாக சார்ஜிங் செய்யும் வசதிகள் இல்லாதது தான் என சைலேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
அடுத்தாக முதலீட்டாளர்களுக்கு முக்கியமான தகவல்களை அளிக்கும் வேளையில் சைலேஷ் சந்திரா கூறிய ஒரு விஷயம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கடந்த வருட விற்பனையை ஒப்பிடுகையில் 2023ல் 90-95 சதவீத வளர்ச்சியில் சுமார் 1 லட்சம் எலக்ட்ரிக் கார்கள் விற்கப்பட்டு உள்ளது.
ஆனால் அடுத்த வருடம் இந்த வளர்ச்சி மிதமானதாக மட்டுமே இருக்கும், இந்த உயர்மட்ட அளவில் இருந்து 30-40 சதவீத வளர்ச்சியை அடைய வாய்ப்பு உள்ளது, ஆனால் இதை ஸ்லோடவுன் என கணக்கிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார். இது முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்.


Click it and Unblock the Notifications