இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டாடா சியாரா கார் புத்தம் புதிய தோற்றத்துடன் மீண்டும் அறிமுகமாகியுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக இந்திய மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்திருந்த Tata Sierra கார் இப்போது மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த காரின் அறிமுகத்தை தொடர்ந்து இதன் தொடக்க விலையாக வெறும் 11.49 லட்ச ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவின் மிடில் கிளாஸ் குடும்பத்தினரும் இதை வாங்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இதனால் அதிக புக்கிங் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 வேரியண்ட், 3 என்ஜின், 6 நிறங்கள்
புதிய சியாரா நான்கு முக்கிய வேரியண்டுகளில் கிடைக்கிறது. பெட்ரோல், டர்போ பெட்ரோல், டீசல் என மூன்று விதமான என்ஜின்களுடன் வாங்கலாம். அதேபோல் ஆறு நிறங்களில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. டிசம்பர் 16-ம் தேதி முதல் புக்கிங் தொடங்குகிறது. 2026 ஜனவரி 15-ம் தேதி முதல் வாடிக்கையாளர்களிடம் காரை டெலிவரி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. டாடா ஷோரூம்களிலோ அல்லது இணையத்தின் வாயிலாகவோ புக்கிங் பணத்தை செலுத்தி முன்பதிவு செய்யலாம்.
ஈஎம்ஐ கணக்கீடு
பொதுவாக கார் லோனுக்கான வட்டி விகிதம் 7.5 சதவீதம் முதல் 11.5 சதவீதம் வரையில் இருக்கும். இது ஒருவரின் கிரெடிட் ஸ்கோர், கடன் காலம், கார் மாடல் ஆகியவற்றை வைத்து வட்டி விகிதம் மாறுப்படும், இதேபோல் கிரெடிட் ஸ்டோர் அதிகமாக இருந்தால் குறைவான வட்டியில் கடன் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் சராசரியாக 10 சதவீத வட்டி விகிதத்தில் 5 வருட காலத்திற்கு கணக்கிட்டால் 11.49 லட்சத்திற்கு உங்களுக்கு மாதம் 24,413 ரூபாய் ஈஎம்ஐ செலுத்த வேண்டி வரும். 5 வருட கடனை கட்டி முடிக்கும் போது மொத்தம் 14,64,771 ரூபாய் செலுத்தியிருப்பீர்கள்.
தற்போது கணக்கீடு என்பது டாடா சியாராவின் அடிப்படை விலையான 11.49 லட்சம் இருந்து மட்டுமே கணக்கிடப்பட்டு உள்ளது. இதை தாண்டி இன்சூரன்ஸ், வரி, செஸ், இதர கட்டணங்கள் கார் வாங்கும் போது செலுத்த வேண்டி வரும்.
விலையும், ஆர்வமும்
11.49 லட்சத்தில் தொடங்கும் விலை, எல்லோருக்கும் எட்டக்கூடிய கார்
அடிப்படை மாடல் விலை 11.49 லட்ச ரூபாய் என்று இருப்பதால் பல குடும்பத்தலைவர்கள் இப்போதே "என் அடுத்த கார் சியாராதான்" என்று முடிவு செய்துவிட்டார்கள். பழைய சியாரா அதன் பிரம்மாண்ட தோற்றத்துக்குப் பெயர்போனது.
புதிய சியாரா நவீன வடிவமைப்பு, பெரிய டச்ஸ்கிரீன், பாதுகாப்பு அம்சங்கள் என எல்லாவற்றையும் கொண்டு வந்துள்ளது. இதேவேளையில் விலையை குறைவாக வைத்திருப்பதால் நகரத்து இளைஞர்கள் முதல் கிராமப்புற குடும்பத்தினர் வரை எல்லோரும் இதைப் பார்த்து ஆசைப்படுகிறார்கள்.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு வருகை
1990-களில் இந்தியாவின் சாலைகளை ஆண்ட சியாரா இப்போது புத்தம் புதிய அவதாரத்தில் திரும்பி வந்துள்ளது. பழைய ரசிகர்களுக்கு இது நினைவலைகளை மீட்டும் விஷயமாகவும். புதிய தலைமுறைக்கு இது வலிமையான, அழகான, மலிவு விலை SUV. டாடா கார்கள் மீது மக்களுக்கு ஏற்கனவே நெக்சான் மூலம் பெரிய நம்பிக்கை உருவாகியிருக்கும் வேளையில் டாடா சியாரா புதிய வர்த்தகத்தை டாடா குழுமத்திற்கு கொண்டு வரும்.
டாடா நிறுவனம் இந்த காரின் மூலம் மீண்டும் இந்திய SUV சந்தையில் தன்னை நிலைநிறுத்தி இருக்கிறது. டிசம்பர் 16-ல் புக்கிங் தொடங்குவதால் டாடா ஷோரூம்களில் இப்போதே கூட்டம் அலைமோதத் தொடங்கிவிட்டனர்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications