டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவின் (TMPV) புதிய எஸ்யூவி காரான டாடா சியரா, டிசம்பர் 16 அன்று முன்பதிவுகள் தொடங்கியது. தற்போது ஆன்லைன் வாயிலாக புக்கிங் அதிகமாக நடக்கும் காரணத்தால் டாடா தனது புக்கிங்-ஐ துவங்கிய முதல் நாளிலேயே மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது கார் பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
டாடா நிறுவனம் முதல் நாள் விற்பனை குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தகவலில், "முன்பதிவுகள் தொடங்கிய முதல் நாளிலேயே, சியாரா பிரியர்களின் உற்சாகத்திற்கும் நம்பிக்கைக்கும் ஒரு புதிய மென்ச்மார்க் நிர்ணயித்துள்ளது, 70,000க்கும் அதிகமான முன்பதிவுகள் மற்றும் 1.35 லட்சம் கூடுதல் வாடிக்கையாளர்கள் முன்பதிவு நடைமுறையில் பல்வேறு கட்டத்தில் உள்ளனர்" என்று கூறியுள்ளது.

டாடா சியாரா காரை அங்கீகரிக்கப்பட்ட டாடா டீலர்ஷிப்கள் அல்லது நிறுவனத்தின் இணையதளம் வழியாக வெறும் ரூ.21,000 செலுத்தி முன்பதிவு செய்யலாம். இந்தத் தொகை இறுதி விற்பனை தொகையுடன் சரிசெய்யப்படும் என டாடா மோட்டார்ஸ் தரப்பில் வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதம் கொடுத்துள்ளது.
டாடா சியாரா கார் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.49 லட்சம் முதல் ரூ.21.29 லட்சம் வரையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மேவும் டாடா சியாரா ஸ்மார்ட்+, பியூர், பியூர்+, அட்வென்ச்சர், அட்வென்ச்சர்+, அக்காம்ப்ளிஷ் மற்றும் அக்காம்ப்ளிஷ்+ என ஏழு மாடல்களில் டாடா குழுமம் அறிமுகம் செய்யப்பட திட்டமிட்டு உள்ளது.
இதேபோல் டாடா சியாரா கார்களுக்கு மூன்று எஞ்சின் விருப்பங்களுடன் வருகிறது. நவம்பர் 30ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட12 மணிநேர சோதனையில் லிட்டருக்கு 29.9 கி.மீ மைலேஜையும், அதிவேக சோதனையில் 222 கி.மீ உச்ச வேகத்தையும் எட்டியது. இச்சோதனைகள் பயிற்சி பெற்ற ஓட்டுநர்களால் கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளில் பதிவாயின.
ஆனால் விற்பனைக்கு வரும் வாகனங்கள் மின்னணு முறையில் 190 கி.மீ வேகம் வரையில் கட்டுப்படுத்தப்படும்.


Click it and Unblock the Notifications