டாடா மோட்டார் நிறுவனத்தின் பயணிகள் வாகனம் விற்பனை அக்டோபர் மாதம் மட்டும் வருடாந்திர அடிப்படையில் 7 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2023 அக்டோபர் மாதத்தில் உள்நாட்டு விற்பனையான கார் எண்ணிக்கை 48,637.

இது கடந்த 2022 அக்டோபர் மாதத்தில் 45,217 ஆக இருந்தது. இதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகனங்களான நெக்ஸான் ஈவி, டியாகோ ஈவி, டைகோர் ஈவி எண்ணிக்கையும் அடங்கும். மேலும் வர்த்தக வாகனங்கள், கனரக வாகனங்கள் சேர்த்தால் அக்டோபர் மாதம் 80,825 வாகனங்களை டாடா விற்பனை செய்துள்ளது.
2022 அக்டோபரில் ஏற்றுமதி செய்யப்பட்ட 206 யூனிட்களில் இருந்து 2023 அக்டோபரில் ஏற்றுமதி 46 சதவீதம் அதிகரித்து 300 யூனிட்களாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மொத்த கார் விற்பனை 45,423 யூனிட்களாக இருந்த நிலையில் தற்போது மொத்த பயணிகள் கார் வாகன விற்பனை 7 சதவீதம் அதிகரித்து 48,637 ஆக உயர்ந்துள்ளது.
எலெக்ட்ரிக் வாகனங்களைப் பொருத்தமட்டில் சர்வதேச வணிகம்/ஏற்றுமதி + உள்நாட்டு விற்பனை ஆகிய அனைத்தையும் சேர்த்து 5,465 கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது. இந்த அளவீடு அக்டோபர் 2022 இல் 4,277 யூனிட்களை இந்த நிலையில் தற்போது 28 சதவீதம் அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த விற்பனை புள்ளிவிவரங்களில் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் மற்றும் டாடா பயணிகள் மின்சார வாகனங்கள் ஆகியவை அடங்கும். இவை இரண்டும் டாடா மோட்டார்ஸ் லிமிடெட்டின் துணை நிறுவனங்கள்.
இந்த நிலையில் புதிய கர்வ்வ் எஸ்யூவியை டாடா மோட்டார்ஸ் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது முக்கியமான விஷயம். டாடா மோட்டார்ஸ் முதலில் Curvv இன் மின்சார மாடலை அறிமுகப்படுத்தும்.
தற்போது ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, கியா செல்டோஸ் மற்றும் ஹோண்டா எலிவேட் ஆகியவை இருக்கும் போட்டி நிறைந்த பிரிவில் புதிய டாடா கர்வ்வ் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்பது நிறுவனத்துக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
இதனிடையே கடந்த அக்டோபர் 2022 இல் விற்பனை செய்யப்பட்ட 32,912 யூனிட்களை விட இந்த அக்டோபரில் டாடா வர்த்தக வாகன விற்பனை 4 சதவீதம் அதிகரித்து 34,317 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. எஸ்சிவி கார்கோ மற்றும் பிக்-அப் பிரிவைத் தவிர அனைத்து பிரிவுகளிலும் வளர்ச்சி காணப்பட்டது.
2022 அக்டோபரில் விற்பனை செய்யப்பட்ட 9,253 யூனிட்களில் இருந்து 2023 அக்டோபரில் HCV டிரக் விற்பனை 10 சதவீதம் அதிகரித்து 10,204 யூனிட்களாக உயர்ந்துள்ளது. டாடா மோட்டார்ஸின் ஐஎல்எம்சிவி டிரக் பிரிவும் கடந்த மாதத்தில் 4,690 யூனிட்களில் இருந்து 14 சதவீதம் வளர்ச்சி கண்டு 5,251 யூனிட்கள் விற்பனையானது.
அக்டோபர் 2022 இல் விற்கப்பட்ட 1,759 யூனிட்களுடன் ஒப்பிடும் போது, 2023 அக்டோபரில் 2,514 யூனிட்டுகளாக 43 சதவீத வளர்ச்சியைக் கண்டது.
பயணிகள் கேரியர் பிரிவுதான்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications