மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டாடா குழுமம் எதிர்காலத்தில் வர இருக்கும் மாற்றத்தின் ஒரு பகுதியாக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பேட்டரி தொழிற்சாலையைத் தொடங்குவதற்கான ப்ளூ பிரிண்ட்-ஐ தயாரித்து வருவதாக டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
CII வர்த்தக உச்சி மாநாடு 2022-ல் பேசிய சந்திரசேகரன், டாடா குழுமம் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்க ஒரு பெரிய மாற்றத்தில் இருப்பதாகவும், கார்பன் பயன்பாட்டை குறைப்பதற்காக வைத்துள்ள இலக்கு குறித்தும் விரைவில் அறிவிக்கப்படும்" என தெரிவித்தார்.
5ஜி
எங்களது முக்கிய வணிகங்களில் டிஜிட்டல், தரவு, செயற்கை நுண்ணறிவு போன்றவற்றைப் புகுத்தி எதிர்காலத்துக்குத் தேவையான மாற்றங்களைச் செய்து வருகிறோம். உலகளாவிய சந்தைகளுக்கு 5ஜி மற்றும் அதற்கு தொடர்புடைய தொலைத்தொடர்பு சாதனங்களை உருவாக்க ஒரு நிறுவனத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம்.
ப்ளூ பிரிண்ட்
இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் பேட்டரியை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை அமைக்க ப்ளூ பிரிண்ட் தயார் செய்துவருகிறோம்.
கார் உற்பத்தி
பயணிகள் கார் உற்பத்தியில் குறிப்பிடத்தக்கப் பல மாற்றங்களைச் செய்துள்ளோம். அதுதான் தற்போது எங்களது மோட்டார் சந்தை விரிவடைந்து வருவதற்கான காரணமாக உள்ளது. மாற்று எரிபொருள் திட்டங்களுக்காக ஹைட்ரஜன் எரிபொருள் இயங்கும் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டு வருகிறோம். ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் நிறுவனங்களிலும் இதை செய்ய திட்டமிட்டு வருகிறோம்.
சாதனை
எலக்ட்ரிக் கார் விற்பனையில் நெக்ஸான் ஈவி மற்றும் டைகர் ஈவி வாகனங்கள் அதிகளவில் விற்று சாதனை செய்துள்ளது. விரைவில் 500 கிலோ மீட்டர் வரையில் செல்லும் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய அண்மையில் அவியா என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். மினி டிரக் டாடா ஏஸ் வாகனங்களில் எலக்ட்ரிக் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
ஹட்ரஜன் எரிபொருள், ஸ்டீல் என எல்லாவற்றிலும் புதிய மாற்றங்களைச் செய்ய டாடா நிறுவனம் ப்ளூ பிரிண்ட் தயார் செய்து வருகிறது என சந்திர சேகரன் தெரிவித்துள்ளார்.
டாடா குழுமம்
டாடா குழுமம் இந்தியாவில் செய்யாதே தொழிலே இல்லை என கூறலாம். குண்டூசி முதல் விமானம் உதிரிபாகங்கள் உற்பத்தி வரை என இந்தியாவின் மிகப் பெரிய வணிக சாம்ராஜியமாக உள்ளது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications