இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் கடந்த சில நாட்களாக வேலைவாய்ப்பு அளிப்பதில் உயர் அதிகாரிகள் செய்த மோசடி காரணமாக பெரும் சர்ச்சை வெடித்தது.
இந்த நிலையில் விதிமீறல் காரணமாக 10க்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்ற தகவல் வெளியான நிலையில் சந்திரசேகரன் முக்கியமான விளக்கத்தை கொடுத்துள்ளார்.

டிசிஎஸ் நிறுவனத்தின் 28வது வருடாந்திர கூட்டத்தில் டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் பேசுகையில் இந்த வேலைவாய்ப்பு மோசடி குறித்து வந்த புகார் மற்றும் அதன் பின்பு விசாரணை செய்யப்பட்டது. புகார் அடிப்படையிலான விசாரணையின் முடிவில் 6 ஊழியர்கள் மற்றும் 6 வர்த்தக அமைப்புகளை விதிமீறல் காரணமாக தடை செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்தார் டாடா சன்ஸ் சந்திரசேகரன்.
மேலும் இக்கூட்டத்தில் டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் பேசுகையில் டிசிஎஸ் நிர்வாகம் சப்ளையர் மேனேஜ்மென்ட் பணிகளை மறுஆய்வு செய்து, தளர்வுகளை கட்டுப்படுத்தவும் உள்ளதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் இனி வரும் காலத்தில் இதுப்போன்ற வேலைவாய்ப்பு அளிப்பதில் மோசடிகள் எதுவும் நடப்பது தடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
டாடா நிர்வாகம் ஒவ்வொரு பணியாளரிடமும் எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான நன்நடத்தை மற்றும் ஒருமைப்பாடு தான், இதை தாண்டி தான் எந்தவொரு நிதியியல் செயல்பாடுகளும் வரும் என சந்திரசேகரன் தெரிவித்தார். எப்பொழுதெல்லாம் ஒரு பணியாளர் ஒழுக்கம் மீறப்படுகிறார் என தெரிகிறதோ, அது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது எனவும் இக்கூட்டத்தில் சந்திரசேகரன் பேசினார்.
2023 ஆம் ஆண்டின் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைமை செயல் அதிகாரிகளிடம் whistleblower கொடுத்த 2 புகாரில் டிசிஎஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் சிலர் பல வருடங்களாக staffing firms-களிடம் இருந்து அதிகப்படியான கமிஷன் பெற்று வருகின்றனர் என புகார் கொடுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து டிசிஎஸ் உயர்மட்ட நிர்வாகம் 3 முக்கிய அதிகாரிகள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இந்த விசாரணை குழுவில் டிசிஎஸ் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரியான அஜித் மேனன் இருந்துள்ளார்.
விசாரணைக்கு பின்பு பலர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது 6 ஊழியர்கள் மற்றும் 6 வர்த்தக அமைப்புகள் விதிமீறல் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டும் தடை செய்யப்பட்டும் உள்ளதாக டாடா சன்ஸ் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு டிசிஎஸ் நிறுவனத்தில் சுமார் 30 வருடமாக பணியாற்றி வரும் சிவகுமார் விஸ்வநாதன் என்பவர் Resource Management Group-ன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications