டாடா சன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியாவின் புதிய தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக காம்ப்பெல் வில்சனை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது.
வில்சனின் நியமத்திற்கு தேவையான அனுமதிகளை வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
விமான போக்கு துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் மிக்க காம்ப்பெல் வில்சன், குறைந்த செலவில் இயக்கப்படும் விமானங்களை நிர்வாகக் செய்வதில் கைதேர்ந்தவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி அனுபவம்
50 வயதான் வில்சன் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்தவர். ஜப்பான், கனடா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் பணிபுரிந்த வில்சன், தற்போது ஏர் இந்தியா மூலம் இந்தியாவிலும் பணிபுரிய உள்ளார். கடந்த 1996ம் ஆண்டு எஸ் ஐ ஏ என்ற நியூசிலாந்து நிறுவனத்தின் பயிற்சியாளராக தொடங்கிய வில்சன், படிப்படியாக இந்த CEO என்ற அளவுக்கு முன்னேறியுள்ளார்.

என் சந்திரசேகரன் கருத்து?
இது குறித்து ஏர் இந்தியாவின் தலைவர் என் சந்திரசேகரன் கூறுகையில், காம்ப்பெல்லை ஏர் இந்தியாவுக்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச அளவில் விமானத் துறையில் மிகப்பெரிய அனுபவத்தினை கொண்டுள்ள வில்சன், ஆசியாவின் சிறந்த பிராண்ட் நிறுவனத்தை கட்டமைக்க அவரின் அனுபவம் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு நிச்சயம் உதவும்.

யார் இந்த காம்ப்பெல் வில்சன்?
நியூசிலாந்தில் உள்ள கேண்டர்பரி பல்கலைக் கழகத்தில் முதுகலைபட்டம் முடித்தவர் வில்சன், விமானத்துறையில் அனுபவம் மிக்க இவரின் பங்கு, நிச்சயம் ஏர் இந்தியாவின் வளர்ச்சிக்கு துணை புரியும் என்று இந்த நிறுவனம் நம்புகிறது.

3 வது நபர்
வில்சனுக்கு முன்பு நியமிக்கப்பட்ட துருக்கி ஏர்லைன்ஸின் மேலாண் இயக்க்னரான இல்கர் அய்சி, கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டாஎர். ஆனால் இவரின் பணிமர்த்தலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பவே, தனக்கு ஏர் இந்தியாவில் பதவி வேண்டாம் என்றும் நிராகரித்தார். அதன் பிறகு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என் சந்திரசேகரனே ஏர்இந்தியாவின் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிகப்பட்டார். இந்த நிலையில் தான் தற்போது வில்சனுக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.