டாடா குழுமத்தில் நடந்து வரும் உயர்மட்ட குழு மத்தியிலான பிரச்சனை தற்போது போர்டுரூம் தாண்டி நாடாளுமன்றத்தின் கதவுகளையும் தட்ட துவகங்கியுள்ளது. சமீபத்தில் டாடா குழுதத்தில் நிலவும் பிரச்சனை குறித்து சமீபத்தில் ராகுல் காந்தி மற்றும் நிர்மலா சீதாராமன் டிவிட்டரில் மோதிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் டாடா டிரஸ்ட் சார்பாக நோயல் டாடா 2 முக்கிய கடிதங்களை அனுப்பி டாடா சன்ஸ் நிர்வாக குழுவை விரைவாக முடிவு எடுக்க கேட்டுக்கொண்டு உள்ளார்.
டாடா சன்ஸ் நிறுவனத்தில் சுமார் 18.38 சதவீத பங்குகளை வைத்திருக்கும் ஷாபூர்ஜி பலோன்ஜி குரூப் தனது பங்கு இருப்பை விற்று 25000 கோடி ரூபாய் அளவிலான நிதியை கோரியுள்ளது, இதற்கான கடிதத்தை ஏற்கனவே டாடா சன்ஸ் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

இதை தொடர்ந்து நோயல் டாடா ஏற்கனவே டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதை தடுக்க நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்யும் திட்டத்தை முன்வைத்திருந்தார். இவ்விரு திட்டம் குறித்தும் டாடா சன்ஸ் நிர்வாகம் முழுமையாக ஆய்வு செய்து இதற்கான தரவுகளை நவம்பர் 26ஆம் தேதி நடக்க இருக்கும் நிர்வாக கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டி கடிதம் அனுப்பியுள்ளார்.
ஆகஸ்ட் மாத இறுதியில் நோயல் டாடா, சந்திரசேகரன், எஸ்பி குரூப் தலைவர் ஷாபூர்ஜி மிஸ்திரி ஆகியோர் மத்தியில் முக்கியமான ஆலோசனைக் கூட்டம் நடந்தது, இதைத் தொடர்ந்து எஸ்பி குரூப் டாடா டிர்ஸ்ட் அமைப்புக்குப் பங்கு விற்பனை திட்டத்தைச் சமர்ப்பித்தது.
இத்திட்டத்தின் படி ஸ்டெர்லிங் இன்வெஸ்ட்மென்ட்ஸ் கார்ப், சைரஸ் இன்வெஸ்ட்மென்ட் ஆகிய இரு மிஸ்திரி குடும்ப நிறுவனத்திடம் இருக்கும் டாடா சன்ஸ் பங்குகளை திரும்ப பெற்றுக்கொண்டு குறைந்தபட்சம் 25000 கோடி ரூபாய் நிதியை அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பங்குகளை டாடா சன்ஸ் நிர்வாகமோ அல்லது டாடா குழும நிறுவனங்களோ வாங்கிக்கொண்டு அதற்கான நிதியைப் பெறவும் தயார் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த 25000 கோடி ரூபாய் என்பது டாடா சன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கான நிதியில் பெரும் பங்கு வகிக்கும் காரணத்தால் தொடர்ந்து டாடா சன்ஸ் பங்குகளை வாங்கும் திட்டத்தை ஒத்திவைத்து வருகிறது டாடா சன்ஸ் நிர்வாகம்.
கடந்த மாதம் நோயல் டாடா தலைமையிலான டாடா டிரஸ்ட் நிர்வாகம், டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் இருந்து பட்டியலிடாமல் இருக்க புது ஐடியாவை முன்வைத்தது.
டாடா எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் சொல்யூஷன்ஸ் மற்றும் டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களையும் டாடா சன்ஸ் நிறுவனத்துடன் இணைப்பது மூலம் டாடா சன்ஸ் வெறுமனே டாடா குழும நிறுவனத்தில் முதலீடு செய்து பங்குகள் மற்றும் பத்திரங்களை வாங்கி வைத்திருக்கும் ஒரு முதலீட்டு நிறுவனமாக இல்லாமல் ஒரு ஆப்ரேட்டிங் நிறுவனமாக மாறும்.
இதன் மூலம் NBFC, CIC, ஆர்பிஐ விதிகள் என அனைத்தையும் களைக்க முடியும் என நோயல் டாடா புதிய திட்டத்தை முன்வைத்தார்.
இவ்விரு திட்டத்தையும் ஆய்வு செய்து முடிவுகளை நவம்பர் 26ஆம் தேதி நடக்க இருக்கும் டாடா சன்ஸ் நிர்வாக கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டி கடிதம் அனுப்பியுள்ளார் நோயல் டாடா.


Click it and Unblock the Notifications