டாடா குழுமத்தில் அதிகப்படியான பங்குகளை வைத்திருக்கும் டாடா டிரஸ்ட் அமைப்பின் நிர்வாக குழுவில் யாருக்கு இடம் என்பதில் பெரும் போராட்டம், எதிர்ப்பு இருந்த நிலையில், பிரச்சனைகளை களைந்து டாடா குழுமம் இயல்பு நிலைக்கு சில மாதங்களுக்கு முன்பு திரும்பியது. இந்த நிலையில் டாடா குழுமத்தின் தாய் நிறுவனமாக இருக்கும் டாடா சன்ஸ் நிர்வாகத் தலைவர் என்.சந்திரசேகரனின் மூன்றாவது பதவிக்கால நீட்டிப்பு குறித்து முக்கியமான ஆலோசனை கூட்டம் இன்று நடந்துள்ளது.
டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா, குழுமத்தின் புதிய தொழில்களில் ஏற்பட்டுள்ள இழப்புகளை சுட்டிக்காட்டியதால் உயர்மட்ட குழுவில் விவாதம் அனல் பறந்தது.

பிரச்சனை
டாடா சன்ஸ் தலைவராக என்.சந்திரசேகரன் மூன்றாவது முறையாக தொடர்வதில் சில அடிப்படை பிரச்சனைகள் உள்ளது. இவருக்கு தற்போது 63 வயதாகிறது, 65 வயதிற்கு பின்பு இப்பதவியில் தொடர வேண்டுமெனில் டாடா டிரஸ்ட் அமைப்பின் சிறப்பு ஒப்புதல் தேவை. என்.சந்திரசேகரனின் பதவி காலம் உடனடியாக முடியவில்லை, 2027 பிப்ரவரி மாதம் வரையில் இவருடைய பதவி காலம் உள்ளது. புதிய நபரை நியமிக்க வேண்டுமாயின் இதற்கான தேடல் பணி இப்போதே துவங்க வேண்டும்.
என்.சந்திரசேகரனுக்கு ஆதாரவு
டாடா சன்ஸ் தலைவராக என்.சந்திரசேகரன் மூன்றாவது முறையாக தொடர்வதில் டாடா குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரித்தனர் என எக்னாமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. ஆனால் நோயல் டாடா மட்டும் இவருடைய மறுநியமனத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்காக அவர் முன்வைத்த காரணம் முக்கியமானது.
இழப்புகள் தான் பிரச்சனை
என்.சந்திரசேகரன் நிர்வாகத்தில் டாடா குழுமம் புதிய தொழில்களில் ஈடுப்பட்டது பசுமை முதலீடுகள் (greenfield investments) இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இது நோயல் டாடா-வுக்கு முக்கியமான பிரச்சனையாக உள்ளது. பொதுவாக கிரீன்பீல்டு முதலீடுகள் லாபமான தொழிலாக மாறுவதற்கு அதிகப்படியாக காலம் தேவை என்றும் டாடா டிரஸ்ட்-ன் மற்ற உறுப்பினர்கள் ஆதாரவு கொடுத்தனர்.
இந்த நிலையில் நோயல் டாடா என்.சந்திரசேகரன் மூன்றாவது முறையாக டாடா சன்ஸ் தலைவராக தொடர வேண்டுமெனில் நான்கு முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளது.
நோயல் டாடாவின் நான்கு நிபந்தனைகள்
நோயல் டாடா, டாடா டிரஸ்ட்ஸ் பிரதிநிதியாக சந்திரசேகரனின் மறு நியமனத்திற்கு முன் நான்கு முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளார்.
முதலாவது, டாடா சன்ஸ் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி பட்டியலிடப்படக்கூடாது (upper-layer shadow bank). இரண்டாவது, நிறுவனத்தில் கடன் இருக்கக்கூடாது. மூன்றாவது, அதிக ஆபத்துள்ள முதலீடுகளில் அதிக செலவு செய்து நிறுவன நிதியை காலி செய்யக்கூடாது. நான்காவது, ஏர் இந்தியா, பிக் பாஸ்கெட் போன்ற நிறுவனங்களை வாங்கியது மூலம் ஏற்படும் இழப்புகளை கட்டுப்படுத்த வேண்டும்.
இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் சந்திரசேகரன் 3வது முறையாக இப்பதவியில் தொடரலாம் என தெரிவித்துள்ளார். இந்த விவாதம் டாடா குழுமத்தின் எதிர்கால திசையை தீர்மானிக்கும் முக்கியமானது.
சந்திரசேகரன் தலைமையில் டாடா குழுமம் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், நோயல் டாடாவின் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் மறு நியமனம் சாத்தியமாகும் நிலை உருவாகியுள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications