அயோத்தி: இந்திய மக்கள் மத்தியில் பெரும் கவனக்தை ஈர்த்த அயோத்தி ராமர் கோயில் மூலம், உத்தர பிரதேசத்தின் பொருளாதாரமே பல மடங்கு உயர போகிறது எனக் கூறப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் ராமர் கோவிலுக்கு மக்களின் வருகை குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் ராமர் கோயில் கட்டப்பட்ட அயோத்தியில் ரூ.750 கோடி மதிப்பில் சர்வதேச தரம் வாய்ந்த 'கோயில் அருங்காட்சியகம்' ('Museum of Temples') அமைப்பதற்கான டாடா சன்ஸ் நிறுவனம் சமர்ப்பித்த திட்டத்திற்கு உத்தரபிரதேச அமைச்சரவை ஜூன் 25 ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒப்புதல் மற்றும் திட்ட விவரங்களைக் குறித்து உத்தர பிரதேச மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெய்வீர் சிங் செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது இந்த சர்வதேச தரம் வாய்ந்த அருங்காட்சியகத்திற்கான நிலத்தை டாடா நிறுவனத்திற்கு உத்தர பிரதேச அரசு 90 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விடப்பட்டு உள்ளது. இதற்கான கட்டணமாக வெறும் ரூ.1 மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த கோயில் அருங்காட்சியகத்தை டாடா சன்ஸ் நிறுவனம், மத்திய அரசின் ஒத்துழைப்புடன், அயோத்தியில் ரூ.650 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது. இந்த டாடா சன்ஸ் நிறுவனம் தனது கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) நிதியைப் பயன்படுத்தி இந்த அருங்காட்சியகத்தை நிர்வகிக்கும் என்று அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு ஜெய்வீர் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், இந்த நிறுவனம் அயோத்தியில் கூடுதலாக ரூ.100 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களையும் மேற்கொள்ளும் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெய்வீர் சிங் கூறினார்.
ஹெலிகாப்டர் சேவைகள்: உத்தர பிரதேச மாநிலத்தின் அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அவற்றில் முக்கியமான ஒன்றாக லக்னோ, பிராயாக்ராஜ், கபிலவஸ்து ஆகிய இடங்களில் பொது மற்றும் தனியார் கூட்டணியில் (PPP) ஹெலிபேடுகளை நிறுவி ஹெலிகாப்டர் சேவைகளைத் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உத்தரப்பிரதேச அரசு மேற்கொள்ளும் இந்த முயற்சி, அயோத்தியாவை ஒரு முக்கிய புனித யாத்திரைத் தலமாக மட்டுமல்லாமல், சுற்றுலாத் தலமாகவும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகம் இந்து மதத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பற்றி விளக்குவதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications