உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை மேம்பாட்டில் திறமை வாய்ந்த முதலமைச்சராக பார்க்கப்படும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மாநிலத்தில் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார். இதன் ஒரு பகுதியாக டாடா சன்ஸ் தலைவருக்கு முக்கிய பொறுப்பை வழங்கியுள்ளார். ஆந்திராவை நோக்கி முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி இருக்கும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆந்திர பிரதேச அரசின் பொருளாதார வளர்ச்சி குழுவின் இணைதலைவராக டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் சந்திரசேகரனை நியமித்திருக்கிறார்.
முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகனும் அமைச்சருமான நர லொகேஷ் ஆகியோர் ஆந்திர பிரதேச தலைநகரம் அமராவதியில் டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் சந்திரசேகரனை சந்தித்து பேசினர்.

இதனை சந்திரபாபு நாயுடு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் "என்னுடைய பழைய நண்பரும் டாடா சன்ஸ் நிறுவனத் தலைவருமான நடராஜன் சந்திரசேகரனுடன் சிறப்பான ஒரு சந்திப்பு நடைபெற்றது. ஆந்திர பிரதேச அரசை பொருத்தவரை முதலீட்டுக்காக பல்வேறு தொழில்துறை தலைவர்களை உறுப்பினராக கொண்ட ஒரு பொருளாதார மேம்பாட்டு பணி குழுவினை உருவாக்குகிறது.
2047-ஆம் ஆண்டுக்குள் ஸ்வர்ண ஆந்திர பிரதேசத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த பணி குழு செயல்பட இருக்கிறது. இந்த குழுவின் இணை தலைவராக டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் செயல்படுவார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய தொழில் கூட்டமைப்பு அமராவதியில் அமைக்க இருக்கும் உலகளாவிய தலைமைத்துவ மையத்தின் பங்குதாரராக இருக்க டாடா நிறுவனம் ஒப்புதல் தெரிவித்துள்ளது எனவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி விசாகப்பட்டினத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான பேச்சுகள் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஆந்திராவிற்கு ஏர் இந்தியா மற்றும் விஸ்தாராவுடன் விமான இணைப்பை ஏற்படுத்துதல் உட்பட பல துறைகளில் எவ்வாறு கூட்டாக செயல்படுவது என்பது குறித்து நாங்கள் ஆய்வு செய்தோம் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். நர லோகேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்" ஆந்திரா மீண்டும் முதலீட்டாளர்களுக்கு உகந்த மாநிலமாக உருவாகி வருகிறது" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆந்திராவில் உணவு பிராசஸிங் யூனிட், அக்வா மற்றும் ஹோரிக்கல்சர் மையங்கள் கொண்ட தொழில்பூங்காவை அமைக்க நடவடிக்கை எடுக்கும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தனிமங்கள் அடிப்படையிலான தொழில் பூங்காக்களை விட உணவு மற்றும் ஹோர்கல்சர் மையங்களை அமைக்க ஆந்திரா உகந்த இடம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறு , குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான துறை சார்ந்த அதிகாரிகளுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது ஆந்திராவில் தற்போது இருக்கும் தொழில் பூங்காக்களின் நிலை என்ன அவற்றை இன்னும் எப்படி மேம்படுத்துவது என்பது குறித்து விரிவான ஆய்வறிக்கை தயார் செய்யும் படி உத்தரவிட்டார்.
Written by: Devika
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications