இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா குழுமம் வேகமாக வளர்ச்சி அடையும் பாதையில் உள்ளது, குறிப்பாக என்.சந்திரசேகரன் தலைமையிலான நிர்வாகத்தில் எலக்ட்ரானிக்ஸ், செமிகண்டக்டர் துறையில் எடுக்கப்பட்ட முயற்சிகள் தற்போது பெரிய அளவில் பலன் அளித்து வருகிறது.
ஆனால் என்.சந்திரசேகரன் மிகுந்த நம்பிக்கையிடன் துவங்கிய டிஜிட்டல் வர்த்தகம் எதிர்பார்த்த பலன் அளிக்காமல் உள்ளது, இதனால் இத்துறையில் செய்யப்படும் புதிய முதலீடுகளை கண்ணும் கருத்துமாக செய்யப்பட்டு வருகிறது டாடா சன்ஸ் நிர்வாகம். இதோடு டாடா குழுமத்தின் ஆஸ்தான வர்த்தகம் பெரும்பாலானவை வளர்ச்சி பாதையில் உள்ளது.

இந்த நிலையில் தான் டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ்-ன் நிர்வாக தலைவராகவும் டாடா குழுமத்தின் முகமாகவும் திகழும் என்.சந்திரசேகரனின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் பிறந்து, கோயம்புத்தூரில் பிறந்து இன்று இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை நிர்வாகம் செய்யும் என்.சந்திரசேகரன் 2024-25 நிதியாண்டில் மொத்தமாக ரூ.155.81 கோடி சம்பளத்தைப் பெற்றுள்ளார். இது கடந்த ஆண்டு அவர் பெற்ற ரூ.135 கோடியை விட 15% அதிகமாகும்.
என்.சந்திரசேகரனின் சம்பளத்தில் ரூ.15.1 கோடி ஊதியமாகவும் பிற பலன்களாகவும் பெற்றுள்ளார். மீதமுள்ள ரூ.140.7 கோடி டாடா குழும நிறுவனங்களின் லாபத்தில் அடிப்படையிலான கமிஷனாகவும் அமைந்துள்ளது. 155 கோடி ரூபாய் சம்பளம் மூலம் இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் பெறும் நிர்வாக அதிகாரிகளில் ஒருவராக சந்திரசேகரன் உயர்ந்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி சிஇஓ மற்றும் நிர்வாக தலைவர்களின் சம்பளத்தை பார்க்கும்போதும் ITC தலைவர் சஞ்சீவ் பூரி 2024-25-இல் ரூ.25.66 கோடி பெற்றுள்ளார், அதேபோல் இன்ஃபோசிஸ் CEO சலில் பாரிக் ரூ.82 கோடியைப் பெற்றுள்ளார்.
இவர்களை தொடர்ந்து டாடா குழுமத்தில் அதிக லாபம், வருமானத்தை ஈட்டும் டிசிஎஸ் சிஇஓ கே.கிருதிவாசன் ரூ.26.52 கோடியையும், விப்ரோ CEO ஸ்ரீனிவாஸ் பல்லா ரூ.53.60 கோடியையும் பெற்றுள்ளனர். டெக் மகிந்திரா CEO மோகித் ஜோஷி ரூ.52.1 கோடி பெற்றுள்ளனர்.

ஒரு நாளுக்கு 42 லட்சம்:
ஒரு வருடம் 155.81 கோடி ரூபாய் சம்பளம் என்றால் 365 நாட்களுக்கு வகுத்தால் ஒரு நாளுக்கு 42,68,767.12 ரூபாய்.
மொத்த ஆண்டு சம்பளம்: ரூ.155.81 கோடி = ரூ.1,55,81,00,000
ஒரு வருடத்தில் நாட்களின் எண்ணிக்கை: 365 நாள்கள்
ஒரு நாள் சம்பளம்: ரூ.1,55,81,00,000 / 365 நாட்கள் = ரூ.42,68,767.12 (தோராயமாக)
டாடா சன்ஸின் லாபம் 24% சரிவு:
டாடா சன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 2024-25 நிதியாண்டு முடிவில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 24.3% சரிவை சந்தித்துள்ளது. இக்காலாண்டில் நிறுவனத்தின் லாபம் ரூ.26,232 கோடியாக குறைந்துள்ளது, இது கடந்த நிதியாண்டில் ரூ.34,654 கோடியாக இருந்ததை விட குறைவாகும். இருப்பினும், சந்திரசேகரனின் சம்பள உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications