டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா சன்ஸ், 2023 முதல் 2024-ஆம் நிதியாண்டில் கடந்த நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 74 சதவீதம் அதிகரித்த நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. அதன்படி டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 49,000 கோடியாக உள்ளது என்று நிறுவனத்தின் 106-வது ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை செப்டம்பர் 6-ஆம் தேதியான நேற்றைய தினம் வெளியிடப்பட்டது.
மொத்த லாபத்தில் பங்குதாரர்களுக்கு கிடைக்கும் பங்கு ரூ.34,625 கோடியாகும், இது 2023-ஆம் நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட ரூ.16,847.79 கோடியை விட இரண்டு மடங்கு அதிகமாகும். அறிக்கையின்படி, நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் 14.64 சதவீதம் அதிகரித்து ரூ.4.76 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

மேலும், டாடா சன்ஸ் செயல்பாட்டின் அடிப்படையில் ரூ. 35,000 டிவிடெண்ட் வழங்கியது. இந்தத் தொகை FY23-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ரூ.17,500 விட அதிகமாகும். அதேபோல 2024-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 30.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் அதாவது 2023-ஆம் நிதியாண்டில் இருந்த சந்தை மதிப்பை விட 47 சதவீதம் அதிகமாகும். முன்பு இந்த மதிப்பு 20.71 லட்சம் கோடியாக இருந்தது.
நிறுவனத்தில் வழங்கப்பட்ட ஊதியம் குறித்து பார்க்கும்போது.. டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரனின் சம்பளம் 2024-ஆம் நிதி ஆண்டில் 20 சதவீதம் உயர்ந்து 135.32 கோடியாக உள்ளது. இதில் கமிஷனாக 121.5 கோடி வழங்கப்பட்டுள்ளது. 61 வயதான இவர் நாட்டின் அதிக சம்பளம் பெறுபவர்களில் ஒருவராக உள்ளார். சந்திரசேகரன் 2016-ஆம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார்.
ஏர் இந்தியா, விஸ்தாரா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் AIX கனெக்ட் ஆகியவற்றை உள்ளடக்கிய விமான நிறுவனங்கள், குழுவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியது. அதன்படி கடந்த நிதியாண்டில் ரூ.15,414 கோடியாக இருந்த இந்த பிரிவின் மொத்த இழப்பு 2024-ஆம் நிதியாண்டில் ரூ.6,337 கோடியாக குறைந்துள்ளது.
2022-ஆம் ஆண்டு தனியார் துறைக்கு மாற்றப்பட்ட ஏர் இந்தியாவின் வளர்ச்சியால் அதிகபட்ச வருவாயை ரூ.51,365 கோடியாக பதிவு செய்துள்ளது. அதன் வருவாய் கடந்த நிதியாண்டை விட 24.5 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அறிக்கை தெரிவிக்கிறது. ஏர் இந்தியாவின் இழப்பு FY24-இல் ரூ.4,444 கோடியாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 23 சதவீதம் அதிகரித்து ரூ.38,812 கோடியாக இருந்தது.
Vistara பிராண்ட், டாடா SIA ஏர்லைன்ஸின் கீழ் உள்ளது. இதன் இழப்பு ரூ.581 கோடியாக குறைந்துள்ளது, FY23-இல் ரூ.1,394 கோடியாக இருந்தது. அதேசமயம் இதன் டர்ன்ஓவர் 29 சதவீதம் அதிகரித்து ரூ.15,191 கோடியாகவுள்ளது.


Click it and Unblock the Notifications