இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பல ஆண்டுகளாக இழந்து வந்த தனது ஆதிக்கத்தை டாடா மோட்டார்ஸ் எல்க்ட்ரிக் வாகனங்கள் வாயிலாகப் பெற்று வருகிறது. எப்படிப் பெர்டோல் / டீசல் கார் விற்பனையில் எப்படி மாருதி சுசூகி அதிகப்படியான கார்களை விற்பனை செய்து அசத்தி வருகிறதோ, எலக்ட்ரிக் கார் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் முன்னோடியாக உள்ளது. இந்த எந்தக் காரணத்திற்காக இழக்க கூடாது என்பதற்காக டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வருகிறது. இதேவேளையில் உள்நாட்டு நிறுவனங்கள் முதல் வெளிநாட்டு நிறுவனங்கள் வரையில் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்கியுள்ளதால் போட்டியும் அதிகரித்து வருகிறது.
டாடா மோட்டார்ஸின் தலைவர் மற்றும் தலைமை கொள்முதல் அதிகாரியாக (CPO) இருக்கும் தாமஸ் ஃப்ளாக்-ஐ இப்போது டாடா குழுமத்தின் முக்கியத் திட்டமாகப் பார்க்கப்படும் லித்தியம்-அயன் பேட்டரி தயாரிப்புக்காக உருவாக்கப்பட்டு உள்ள புதிய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிறுவனம் விரைவில் தனது உற்பத்தி மற்றும் வணிகத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாமஸ் ஃப்ளாக்-ன் நியமனம் டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் சொந்தமாக அவர் தான் வேண்டும் எனத் திட்டமிட்டு நியமிக்கப்பட்டதாகத் தெரிகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் சந்திரசேகரன் தாமஸ் ஃப்ளாக்-ஐ ஹேண்ட்பிக் செய்துள்ளார்.
தாமஸ் ஃப்ளாக்
54 வயதான தாமஸ் ஃப்ளாக் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் நீண்ட காலமாக இருக்கும் நிலையில், எல்கட்ரிக் கார்களில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரி தயாரிப்புக்காக உருவாக்கப்பட்டு உள்ள புதிய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டது சரியான தேர்வாகப் பார்க்கப்படுகிறது.
என் சந்திரசேகரன்
டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் சொந்தமாக முடிவு செய்து தாமஸ் ஃப்ளாக்-ஐ ஹேண்ட்பிக் செய்து சிஇஓ-வாக நியமிக்க இதர சில முக்கியக் காரணமும் உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றியதை தாண்டி உதிரிபாகங்கள் மற்றும் சப்ளை செயின் ஆகியவற்றில் அவருக்குப் பெரும் அனுபவம் உள்ளது தான். டாடா குழுமத்தின் புதிய லித்தியம்-அயன் பேட்டரி நிறுவனம் குஜராத் மாநிலத்தில் Sanand பகுதியில் அமைக்கப்பட உள்ளது.
டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் நாட்டின் மிகப்பெரிய EV கார் விற்பனை நிறுவனமாக இருக்கும் வேளையில் இந்த ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தும் முயற்சியில் டாடா சன்ஸ் பேட்டரி வணிகத்தில் 4,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்கிறது. தற்போது டாடா சன்ஸ் இந்தப் பேட்டரி நிறுவனத்திற்கு அப்பல்லோ என்ற CODE NAME வைத்துள்ளது. மேலும் இப்பிரிவு வர்த்தகத்தை டாடா சன்ஸ் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியின் முக்கியத் தூண் ஆக இருக்கும் என நம்பப்படுகிறது.
வெளிநாட்டவர்
தாமஸ் ஃப்ளாக் வெளிநாட்டவர், இவர் 2017 இல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். இப்போது டாடா மோட்டார்ஸ் நிர்வாக யாக இருந்த Guenter Butschek கீழ் பணியாற்றினார். தாமஸ் ஃப்ளாக் அமெரிக்காவின் போர்டு மோட்டார் நிறுவனத்தில் 14 வருட பணியாற்றிய போது, மூலப்பொருள் மற்றும் ஸ்டாம்பிங்கிற்கான உலகளாவிய கொள்முதல் இயக்குநராக இருந்தார்.
அட்வான்ஸ் மாடுலர் பிளாட்ஃபார்ம்
தாமஸ் ஃப்ளாக் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் அட்வான்ஸ் மாடுலர் பிளாட்ஃபார்ம் அல்லது AMP ஐ அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வென்டார் பிரிவு நிறுவனங்களின் எண்ணிக்கை பயணிகள் மற்றும் வணிக வாகனப் பிரிவுகளில் பெரிய அளவில் குறைக்கப்பட்டு உள்ளது.
லித்தியம்-அயன் பேட்டரி
தாமஸ் ஃப்ளாக் தற்போது டாடா குழுமத்தின் லித்தியம்-அயன் பேட்டரி தயாரிப்புக்காக உருவாக்கப்பட்டு உள்ள புதிய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டாலும் தொடர்ந்து டாடா மோட்டார்ஸ்-ன் கொள்முதல் பிரிவை விழிநடத்துவார். இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
7.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடு
டாடா குரூப் அடுத்த 5 வருடத்தில் தற்போது இருக்கும் வர்த்தகம் மற்றும் புதிய வர்த்தகத்தில் சுமார் 7.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளது. இந்தப் புதிய வர்த்தகத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள், பேட்டரி, ரினியூவபிள், 5ஜி, பிரிசிஷன் எலக்ட்ரானிக்ஸ், செமிகண்டக்டர் ஆகிய துறைகள் இந்தப் புதிய முதலீட்டில் அடங்கும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications