ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் ஆட்டம் இன்று வாழ்வா சாவா என்று துவங்கிய நிலையில், அனைவரின் கணிப்பின் படி இந்திய அணி அடித்துத் துவைத்து 397 ரன்களை எடுத்து அசத்தியது.
இதில் முக்கியமாக சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 50 சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி எட்டியது மட்டும் அல்லாமல் பல வருடங்களாக யாராலும் தொட முடியாத சச்சின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி. இதேபோல் ஸ்ரேயாஸ் ஐயர் 67 பந்துகளில் 100 ரன்களை எடுத்து அசத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி பேட்டிங் செய்யத் துவங்கியது முதல் 5 ஓவர் தொடர்ந்து பாலுக்குப் பால் ரன் அடித்து விக்கெட்டை கட்டுப்படுத்தினாலும் ஷிமி-யின் பவுலிங்-ஐ எதிர்கொள்ள முடியாமல் முதல் விக்கெட்-ஐ இழந்தது நியூசிலாந்து அணி, இதைத் தொடர்ந்து பெரும் நம்பிக்கையாக இருந்த ரச்சின் ரவிந்திராவும் சொற்ப ரன்களில் ஆட்டத்தை இழந்தது மூலம் நியூசிலாந்து ஷாக்கானது.
அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் ஆட்டம் விறுவிறுப்பாக நடத்து வரும் வேளையில் இந்தப் போட்டியை நேரில் காண கௌதம் மேனன், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஆகியவோர் வந்த நிலையில், இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த்-ம் வந்திருந்தார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் லதா ரஜினிகாந்த், அனிரூத் தந்தை ரவிசந்திரன் ஆகியோரும் இருந்தனர். இவர்களுடன் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமான டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் தலைவரும், தமிழருமான சந்திரசேகரனும் மேட்ச் பார்த்து ரசித்தார்.
இந்திய வர்த்தகச் சந்தையில் சந்திரசேகரன் தலைமையில் பல புதிய துறையில் வேகமாக வளர்ந்து வரும் டாடா குழுமம், அடுத்ததாகச் செமிகண்டக்டர் துறையில் இறங்க முயற்சி செய்து வருகிறது. இந்தப் பிசியான நேரத்தில் தீவிர கிரிக்கெட் ரசிகரான சந்திரசேகரன் மும்பை வான்கடே மைதானத்தில் மிஸ் செய்யாமல் பார்த்து ரசித்துள்ளார்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications