டாடாவின் புதிய திட்டம்.. யுனிவெர்சல் POS சிஸ்டம் உருவாக்க முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் தலைமையில் உருவாகியுள்ள புதிய ரீடைல் பேமெண்ட் நிறுவனம் மொபைல் போன்களில் இயங்கும் புதிய யுனிவெர்சல் பாயின்ட் ஆப் சேல்ஸ் சிஸ்டத்தை இயக்க திட்டமிட்டுள்ளது.

இந்த யுனிவெர்சல் POS சிஸ்டத்தை எந்த ஒரு பேமெண்ட் நிறுவனமும் இதைப் பயன்படுத்திப் பேமெண்ட் சேவையை அளிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

இதுமட்டும் அல்லாமல் உலகளவில் இதைப் பயன்படுத்தும் வகையி்ல் யூனிவெர்சல் பேமெண்ட் ஐடி-க்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது, இதன் மூலம் thumbprint மூலம் செய்யப்படும் பேமெண்ட்கள் அனைத்தையும் மாற்ற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா சன்ஸ் கூட்டணி

டாடா சன்ஸ் கூட்டணி

ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கப்பட்ட New Umbrella Entity (NUE) திட்டத்தின் கீழ் டாடா சன்ஸ், ஹெச்டிஎப்சி வங்கி, கோட்டாக் மஹிந்திரா வங்கி, ஏர்டெல் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து 10 லட்சத்திற்கும் அதிகமான வர்த்தகங்களுக்கும், டவுன் மற்றும் கிராமப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு மார்டன் பணப் பரிமாற்ற சேவையை அளிக்க உள்ளது.

ஆதார் வாயிலாகப் பேமெண்ட்

ஆதார் வாயிலாகப் பேமெண்ட்

இக்கூட்டணி உருவாக்கும் புதிய யூனிவெர்சல் பேமெண்ட் ஐடி மூலம் ஆதார் ரீடரின் தேவையை முழுமையாக நீக்க முடியும். மேலும் இந்த யூனிவெர்சல் பேமெண்ட் ஐடி கொண்ட ஒருவர் எந்தப் போன் வாயிலாகவும் பேமெண்ட்-ஐ செய்ய முடியும் இதனால் ஸ்மார்ட்போனின் தேவை இதில் இல்லை.

டிஜிட்டல் பேமெண்ட் சேவை

டிஜிட்டல் பேமெண்ட் சேவை

இதனால் இந்திய கிராமங்களில் இதுநாள் வரையில் செல்ல முடியாமல் இருக்கும் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளை வெறும் பியூச்சர் போன்கள் மூலமாகவே செய்ய முடியும் அளவிற்கு இந்தத் திட்டத்தை உருவாக்கி வருகிறது டாடா சன்ஸ் தலைமையிலான கூட்டணி.

New Umbrella Entity உரிமம்

New Umbrella Entity உரிமம்

தற்போது டாடா குழுமம் தனது கிளை நிறுவனமான Ferbine Payments நிறுவனத்தின் வாயிலாக New Umbrella Entity (NUE) உரிமம் வாங்க விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது. இந்தப் பிரிவின் கீழ் உரிமம் பெற டாடா தலைமையிலான கூட்டணி மட்டும் அல்லாமல், ரிலையன்ஸ் தலைமையிலான கூட்டணி, அமேசான் தலைமையிலான கூட்டணி, பேடிஎம் தலைமையிலான கூட்டணி என 4 பேர் போட்டிப்போட்டு வருகின்றனர்.

Ferbine பேமெண்ட்ஸ் பங்கீடு

Ferbine பேமெண்ட்ஸ் பங்கீடு

மேலும் Ferbine Payments நிறுவனத்தில் டாடா 40 சதவீத பங்குகளை வைத்திருக்கும் நிலையில், ஏர்டெல், மாஸ்டர்கார்டு, Nabard ஆகியவை தலா 10 சதவீத பங்குகளையும், ஹெச்டிஎப்சி வங்கி, கோட்டாக் மஹிந்திரா வங்கி தலா 9.99 சதவீத பங்குகளையும், பிளிப்கார்ட், நேஸ்பர்ஸ் தலா 5 சதவீத பங்குகளையும் முதலீடு செய்து பெற்றுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata Sons consortium for NUE readying mobile phone-based universal POS system

Tata Sons consortium for NUE readying mobile phone-based universal POS system
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X