இந்திய கார்ப்ரேட் சந்தையில் செப்டம்பர் 30ஆம் தேதி மிகவும் முக்கியமான நாள், நாட்டின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டி ஆர்பிஐ 3 வருடத்திற்கு முன்பு உத்தரவிட்ட நிலையில், நாளை கடைசி நாள்.
டாடா சன்ஸ் கீழ் தான் டாடா குழுமத்தின் 100க்கும் அதிகமான நிறுவனங்கள் பிராண்டுகள் என அனைத்தும் உள்ளது. இது டாடா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு தலையாய அமைப்பு, இந்த நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகள் டாடா குழும நிறுவனங்களும், டாடா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் டிரஸ்ட்கள் மூலம் இயங்கி வருகிறது. சொல்லப்போனால் டாடா குழுமத்தின் குடுமி தான் இந்த டாடா சன்ஸ்.

2025ஆம் ஆண்டில் டாடா குழுமம் சுமார் 15.34 கோடி ரூபாய் வருமானத்தையும், 1.13 லட்சம் கோடி ரூபாய் லாபத்தையும், சுமார் 26.7 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டையும் பெற்றுள்ளது.
3 வருடத்திற்கு முன்பு செப்டம்பர் 30ஆம் தேதி இறுதி தான் என அறிவித்து ஆர்பிஐ சுமார் 16 நிறுவனங்களை கண்டறிந்து அவை அனைத்தும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அப்படி என்ன உத்தரவு..?
இந்தியாவில் செயல்படும் அனைத்து NBFC நிறுவனத்தின் அப்பர் லேயர் நிறுவனம் பங்குச்சந்தையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் கட்டாயம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுத்தப்பட வேண்டும் என்று கடந்த வருடம் கட்டாய விதிமுறையை அக்டோபர் 2021ல் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் டாடா கேப்பிடல் நிறுவனத்தின் அப்பர் லேயர் NBFC ஆக டாடா சன்ஸ் நிறுவனத்தை ஆர்பிஐ 2021ஆம் ஆண்டு அடையாளம் கண்டது, இதன் படி செப்டம்பர் 2025-க்குள் என்.சந்திரசேகரன் தலைமையிலான டாடா சன்ஸ் மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட வேண்டும் என உத்தரவு வெளியானது.
ஆர்பிஐ இந்த விதிமுறையை விதித்த நாளில் இருந்து டாடா சன்ஸ் நிர்வாகம் விதிமுறைக்கு இணங்க வேண்டிய அதேநேரத்தில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவதை நிறுத்த வேண்டும் என திட்டமிட்டது. இதற்காக கடன்களை குறைத்தது முதல் பல நிர்வாக மாற்றங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தது.
இந்த நிலையில் மார்ச் 2024 ஆமல் டாடா சன்ஸ் ஆர்பிஐ-யிடம் தான் NBFC உரிமத்தை திரும்ப கொடுத்துல் பதிவில் இருந்து நீக்க கோரிக்கை விடுத்தது. இதை தொடர்ந்து ஜனவரி 2025ல் ஆர்பிஐ டாடா சன்ஸ் கோரிக்கையை பெற்றதாகவும், ஆய்வு செய்வதாகவும் அறிவித்தது. ஆனால் இந்த கட்டுப்பாட்டில் இருந்து முழுமையாக வெளியேறியதா என்பதை ஆர்பிஐ இன்னும் வெளியிடவில்லை.
இதேபோல் ஆர்பிஐ-யிடம் இருந்து டாடா சன்ஸ் பெற்ற Core Investment Companies (CIC) உரிமம் தொடர்பான ஒரு பிரச்சனையும் உள்ளது. இதற்கான இறுதி தீர்வும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தோல்வி அடைந்தால் டாடா சன்ஸ் பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டிய கட்டாயம் உருவாகும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications