டாடா குழுமத்துக்கு சொந்தமான டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ஓசூர் , சென்னை உள்ளிட்ட பகுதிகளில் ஆலைகளை அமைத்து ஐபோன்களை உற்பத்தி செய்து வருகிறது. ஆப்பிள் நிறுவனத்திற்கு தேவையான ஐபோன்களை உற்பத்தி செய்து வழங்கக்கூடிய இரண்டாவது பெரிய நிறுவனமாக டாடா நிறுவனம் உருவெடுத்து இருக்கிறது.
இந்தியாவில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துக்கு தேவையான ஐபோன்களை உற்பத்தி செய்து வழங்குகிறது. தமிழ்நாட்டில் சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஆலை அமைத்துள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம் தான் இந்தியாவில் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தியாளராக இருக்கிறது.

ஃபாக்ஸ்கான் நிறுவனத்துக்கு அடுத்தபடியாக டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ஓசூர் மற்றும் சென்னையில் ஆலைகளை நிறுவி ஐபோன்களை அசெம்பிள் செய்து ஏற்றுமதி செய்து வருகிறது. டாடா குழுமத்திற்கு உட்பட்ட நிறுவனங்களிலேயே வேகமாக வளர்ந்து ஒரு நிறுவனமாக டாடா எலக்ட்ரானிக்ஸ் படிப்படியாக உருவெடுத்து வருகிறது .
இந்த சூழலில் டாடா குழுமம் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் கூடுதலாக 1500 கோடி ரூபாயை முதலீடு செய்திருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. பங்குச்சந்தையில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் இந்த தகவல் வெளியாகியிருக்கிறது . டாடா குழுமத்தின் ஹோல்டிங் கம்பெனியான டாடா சன்ஸ் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் மட்டும் இந்த ஓராண்டில் மொத்தம் 4500 கோடி முதலீடு செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தன்னுடைய ஐபோன் உற்பத்தியை தொடர்ந்து விரிவாக்கம் செய்வதில் ஆர்வம் காட்டுகிறது என்பது இதன் மூலம் தெரிய வந்திருக்கிறது. டாடா உற்பத்தி செய்யும் ஐபோன்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இது தவிர மேலும் பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்வதற்கு டாடா சன்ஸ் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபோன் உற்பத்தி மற்றும் செமி கண்டக்டர் பிரிவை விரிவாக்கம் செய்வதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே ஓசூர், சென்னையில் உள்ள ஆலைகள் இதன் மூலம் விரிவாக்கம் செய்யப்படும். இது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்கும்.
டாடா குழுமத்தில் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனமாக தான் டாடா எலக்ட்ரானிக்ஸ் இருக்கிறது. 2024 ஆம் நிதியாண்டில் 825 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்த நிறுவனமாக இருந்தது தற்போது அது 69 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டு இருக்கிறது . ஐபோன் மற்றும் செமி கண்டக்டர் உற்பத்தி பெருக்கும் போது இது லாபம் தரும் நிறுவனமாக மாறும். ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை பெருக்குவதற்கு திட்டமிட்டு இருக்கக்கூடிய சூழலில் தான் டாடா நிறுவனம் அதற்கு ஈடு கட்ட கூடிய வகையில் தங்களுடைய ஐபோன் உற்பத்தி திறன்களை மேம்படுத்துவதற்காக இப்படி கூடுதலாக முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications