இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக குழுமங்களில் ஒன்றாக விளங்கும் டாடா குழுமத்தின் தலைவராக இருந்த ரத்தன் டாடா மறைவுக்கு பின்பு, டாடா டிரஸ்ட், டாடா சன்ஸ் உள்ளிட்ட தலையாய நிறுவனங்களில் நிர்வாக மாற்றங்கள் நடந்து அடுத்த முக்கிய அடி எடுத்து வைக்கும் நிலையில் பெரும் சவாலை சந்தித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் அதாவது ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலத்தில் டாடா குழும நிறுவனத்தின் சில முக்கிய நிறுவனங்கள் கலவையான செயல்பாட்டை வெளிப்படுத்தி முதலீட்டாளர்களுக்கும், சந்திரசேகரன் தலைமையிலான உயர்மட்ட நிர்வாகத்திற்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டாடா பவர் போன்ற முக்கிய நிறுவனங்கள் இந்த 6 மாத காலத்தில் ஒற்றை இலக்க வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், மற்ற சில நிறுவனங்களின் லாப அளவில் குறைந்துள்ளது.
வருவாயிலும், லாபத்திலும் ஏற்பட்டுள்ள தடுமாற்றம் டாடா குழுமத்தின் பங்குச் சந்தை செயல்திறனையும் பாதித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்த டாடா குழுமம் பங்குகள், நடப்பு நிதியாண்டின் தொடக்கத்திலிருந்து நிஃப்டி குறியீட்டின் சராசரி அளவை விட மோசமான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது.
டாடா மோட்டார்ஸ், டைட்டன், டாடா எல்ஸி, டாடா கம்யூனிகேஷன்ஸ், டாடா கன்ஸ்யூமர், டாடா ஸ்டீல் போன்ற முக்கிய பங்குகள் 7% முதல் 20% வரை வீழ்ச்சியடைந்துள்ளன. இந்த சவாலான சூழ்நிலைக்கு மத்தியில், டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன், டாடா குழும நிறுவனங்களின் சிஇஓ-க்களுக்கு முக்கிய அறிவுரையை வழங்கியுள்ளார்.
என்.சந்திரசேகரன் கொடுத்த அறிவுரையில், நடப்பு நிதியாண்டின் 6 மாதத்தில் ஏற்பட்ட தடுமாற்றத்தை கண்டு துவண்டுவிட வேண்டாம், தீவிரமான வளர்ச்சி கொள்கைகளை பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளார். உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலைமைகளுக்கு மத்தியிலும், வளர்ச்சி வாய்ப்புகளை உடனடியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், லாபம் ஈட்டும் திறனை சில காலத்தில் சரிசெய்யலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் டாடா குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் வருவாய் வருடாந்திர அடிப்படையில் 4% வளர்ச்சியைப் பதிவு செய்து, ரூ.43,171 கோடி வருவாயை எட்டியுள்ளன. இருப்பினும், முந்தைய அரையாண்டை ஒப்பிடுகையில் வருவாய் மற்றும் லாபம் முறையே 2% மற்றும் 23% குறைந்துள்ளது. இதேபோல் லாபத்தின் மார்ஜின் அளவும் 9.78% இருந்து 7.7% ஆகக் குறைந்துள்ளது.
இதுதான் டாடா குழுமத்தின் அடிப்படை பிரச்சனை, லாப அளவீடு 23% சதவீதம் குறைந்துள்ளது. இது டாடா குழுமத்தில் மட்டும் அல்லாமல் இந்தியாவில் பல குழுமமும் இதேபோன்று பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இந்தியா முழுவதும் இத்தகைய நெருக்கடியை எதிர்கொள்ள முக்கியமான காரணம் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் வருமானத்தில் ஏற்பட்டுள்ள சரிவு.
இந்தியாவில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் குறைந்து வரும் வீட்டுப் பொருளாதாரம் ஆகியவை தனியார் நுகர்வை மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது. இது டாடா குழுமம் உட்பட இந்திய நிறுவனங்களின் ஒட்டுமொத்த செயல்பாட்டை பாதித்துள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications