2023 ஆம் ஆண்டில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் கொடுத்த நிறுவனங்களில் டாடா குழுமம் இந்த வருடம் முதல் இடத்தில் உள்ளது என்றால் மிகையில்லை. இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள 27 டாடா குழும நிறுவனப் பங்குகளின் முதலீட்டாளர்களுக்குச் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவிலான லாபத்தைக் கொடுத்துள்ளது.
இந்த மிகப்பெரிய வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பிறந்து இன்று டாடா குழும நிறுவனங்களின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் என்.சந்திரசேகரன் என்றால் மிகையில்லை.

பல புதிய வர்த்தகத்தில் டாடா குழுமத்தை கொண்டு சென்றது மட்டும் அல்லாமல் வருமானம் இல்லாத அல்லது குறைவாக இருக்கும் வர்த்தகப் பிரிவை மறுசீரமைப்பு செய்யவும், டிஜிட்டல் வர்த்தக விரிவாக்கம், பல நிறுவனத்தின் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் போட்டி நிறுவனங்களைக் கைப்பற்றப்பட்டது.
இப்படி 2023 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பானதாக டாடா குழுமத்திற்கு, சந்திரசேகரனுக்கு அமைந்த நிலையில், 2023 ஆம் ஆண்டில் 2 சம்பவங்கள் தன்னுடைய மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளதாகவும், இதன் மூலம் பல பாடங்களைக் கற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
முதல் சம்பவம் இந்தியாவின் வெற்றிகரமான நிலவு பயணம், உலகிலேயே முதல் நாடாக இந்தியா நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தைத் தரையிறக்கிப் பல சோதனைகளைச் செய்தது மட்டும் அல்லாமல் உலகமே வியக்கும் வகையில் பல புகைப்படங்களை எடுத்து வெளியிட்ட அசத்திய இஸ்ரோ.
சந்திரசேகரன் அவர்களுடைய YEAR ENDER கடிதத்தில் இந்தியாவின் வெற்றிகரமான நிலவு பயணம், இந்த இமாலய சாதனையை வெறும் 600 கோடி ரூபாய் முதலீட்டில் இஸ்ரோ செய்துள்ளது மூலம், சரியான திட்டமிடல் உடன் செய்தால் எதையும் வெல்ல முடியும் என்பதை இஸ்ரோ இந்திய மக்களுக்கும், உலக நாடுகளுக்கும் காட்டியுள்ளது. எப்போதும் இந்தியாவின் எதிர்காலம் குறித்துப் பேசுகையில் ஒரு உற்சாகம் இருக்கும், அதேபோல் இந்தியாவின் கடந்த காலப் பயணம் முக்கியமானதாக உள்ளது எனக் கூறினார்.
2வது சம்பவம் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் செயல்பாடு. இறுதிப் போட்டியில் தோல்வியுற்று ஏமாற்றமாக இருந்தாலும், பல இந்தியர்களின் மனத்தில் நீங்கா இடத்தைக் கொண்டு இருக்கும் 1983 மற்றும் 2011 உலகக் கோப்பை வெற்றி தருணங்கள் என்னுடைய மனதிலும் உள்ளது.
கபில் தேவ் மற்றும் எம்.எஸ் தோனி தலைமையிலான அணி மீது பெரும் அபிமானம் எனக்கு உண்டு. ஆனால் ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி இறுதிப் போட்டி வரையில் சிறப்பான திறனை வெளிப்படுத்தியது இதுவரையில் நான் பார்த்தது இல்லை எனத் தனது YEAR ENDER கடிதத்தில் எழுதியுள்ளார்.


Click it and Unblock the Notifications