100க்கும் அதிகமான நிறுவனங்கள், உலகின் பல நாடுகளில் பல துறைகளில் வர்த்தகம் செய்யும் டாடா சாம்ராஜ்ஜியத்தின் தலையாய ஹோல்டிங் நிறுவனம் தான் இந்த டாடா சன்ஸ். இந்த நிறுவனத்தைப் பற்றி பலருக்கும் தெரியும், டாடா குழுமத்தில் இயங்கி வரும் அனைத்து நிறுவனம், முதலீடுகள், வர்த்தகம் என சகலத்திற்கும் தலையாய உரிமை கொண்டாடுவது டாடா சன்ஸ். இந்த நிறுவனத்தின் தலைவராகத் தான் தற்போது நாமக்கல் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த என்.சந்திரசேகரன் இருக்கிறார்.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் கீழ் தான் டாடா குழுமத்தின் அனைத்து வர்த்தகமும் வருகிறது, இந்த நிறுவனம் இதுநாள் வரையில் ஒரு தனியார் முதலீட்டு மற்றும் நிர்வாகமாக இயங்கி வந்த வேளையில் . ஆர்பிஐ விதிமுறை காரணமாக டாடா சன்ஸ் பங்குச்சந்தைக்கு வர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.

இதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக டாடா சன்ஸ் வாங்கிய கடனை மொத்தமாகத் தீர்த்தது மட்டும் அல்லாமல் வங்கியில் பதிவை அதாவது ரிஜிஸ்ட்ரேஷனை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது என்.சந்திரசேகரன் தலைமையிலான டாடா சன்ஸ் நிர்வாகம்.
டாடா குழுமத்தின் 410 பில்லியன் டாலர் மதிப்புள்ள முதலீட்டு நிறுவனமான டாடா சன்ஸ், இந்திய ரிசர்வ் வங்கிக்கு (RBI) தனது பதிவு சான்றிதழைத் தானாக முன்வந்து ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இதை சாத்தியப்படுத்த 20,000 கோடிக்கும் அதிகமான கடனை மொத்தமாகத் தீர்த்துள்ளது டாடா நிர்வாகம். இதன் மூலம் டாடா சன்ஸ் தொடர்ந்து பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாமல், தனியார் நிறுவனமாகச் செயல்பட முடியும்.
டாடா சன்ஸ் ரூ.20,300 கோடிக்கும் அதிகமான கடன்களை முழுமையாகத் தீர்த்துள்ளது. இந்த பிரச்சனைக்கு அடிப்படை காரணமாக இருந்த ஆர்பிஐ விதிமுறைகள் என்ன சொல்கிறது.
இந்தியாவில் செயல்படும் அனைத்து NBFC நிறுவனத்தின் அப்பர் லேயர் நிறுவனம் பங்குச்சந்தையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் கட்டாயம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுத்தப்பட வேண்டும் என்று கடந்த வருடம் கட்டாய விதிமுறையை விதித்தது.
இந்த நிலையில் டாடா கேப்பிடல் நிறுவனத்தின் அப்பர் லேயர் NBFC ஆக டாடா சன்ஸ் நிறுவனத்தை ஆர்பிஐ கடந்த ஆண்டு அடையாளம் கண்டது, இதன் படி செப்டம்பர் 2025-க்குள் என்.சந்திரசேகரன் தலைமையிலான டாடா சன்ஸ் மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட வேண்டும்.
ஆர்பிஐ இந்த விதிமுறையை விதித்த நாளில் இருந்து டாடா சன்ஸ் நிர்வாகம் விதிமுறைக்கு இணங்க வேண்டிய அதேநேரத்தில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவதை நிறுத்த வேண்டும் என திட்டமிட்டது. இதன் விளைவாகவே 20,300 கோடி ரூபாய்க் கடனை மொத்தமாக அடைத்துவிட்டு டாடா சன்ஸ் தனது பதிவுச் சான்றிதழைத் திருப்பி கொடுத்துள்ளது.
மேலும் தீர்க்கப்பட வேண்டிய கடனில், ரூ.363 கோடி மதிப்புள்ள மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் மற்றும் விருப்ப பங்குகளும் உள்ளது. இதற்காக டாடா சன்ஸ், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் ரூ.405 கோடி வைப்புத்தொகை வைத்துள்ளது. இந்த விபரத்தையும் டாடா சன்ஸ் தனக்கு கடன் கொடுத்தவர்களுக்கு மட்டும் அல்லாமல் ஆர்பிஐ-க்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வியப்பு அளிக்கும் ஈவுத்தொகை
டாடா சன்ஸ், அதன் பங்குதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு 35,000 ரூபாய் என அதிகபட்ச டிவிடண்டை வழங்கியுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருக்கும் பெரும்பாலான பங்குதாரர்கள் டாடா குழுமத்தைச் சேர்ந்தவை.
டோரப்ஜி டாடா டிரஸ்ட் டாடா சன்ஸில் 28% பங்குகளை வைத்துள்ளது. அதைத் தொடர்ந்து ரத்தன் டாடா டிரஸ்ட் 24% பங்குகளைக் கொண்டுள்ளது. ஸ்டெர்லிங் இன்வெஸ்ட்மெண்ட், சைரஸ் இன்வெஸ்ட்மெண்ட், டாடா மோட்டார்ஸ், டாடா கெமிக்கல்ஸ் மற்றும் டாடா பவர் ஆகியவை முக்கிய பங்குதாரர்களாக உள்ளன.
டாடா சன்ஸ் தனது பட்டியலிடப்பட்ட 13 நிறுவனங்களிலிருந்து கிட்டத்தட்ட ரூ.24,000 கோடியை டிவிடண்ட் பெற்றுள்ளது. சந்தை மதிப்பில் இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), FY24 இல் டாடா சன்ஸுக்கு சுமார் ரூ.19,000 கோடி டிவிடண்ட் வழங்கியது. அதைத் தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை முறையே ரூ.2,000 கோடி மற்றும் ரூ.1,450 கோடி வழங்கின.
2024ஆம் நிதியாண்டின் அறிக்கையின்படி, மார்ச் 2024 முடிவடைந்த நிதியாண்டில் டாடா சன்ஸின் நிகர இலாபம் 57% அதிகரித்து ரூ.34,654 கோடியை எட்டியது. 2024ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 25% அதிகரித்து ரூ.43,893 கோடியாக உயர்ந்தது. கடந்த ஆண்டு இது ரூ.35,058 கோடியாக இருந்தது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications