மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் இந்தியாவை விற்பனை செய்ய முடிவு செய்த நாளில் இருந்து டாடா குழுமம் இதைக் கைப்பற்றத் துடித்துக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் டாடா குழுமத்தின் முயற்சிக்குப் பலன் அளிக்கும் வகையில் ஏர் இந்தியா ஏலத்தில் டாடா வெற்றிபெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் அரசு விமானச் சேவை இல்லாத உலக நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இணைய உள்ளது.
ஏர் இந்தியா
ஏர் இந்தியா இந்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை நிறுவனம். இந்நிறுவனம் 10 வருடங்களுக்கும் அதிகமான காலகட்டத்திற்குத் தொடர்ந்து நஷ்டத்தைப் பதிவு செய்தது மட்டும் அல்லாமல் அதிகளவிலான கடனிலும் மூழ்கியிருந்த காரணத்தால் ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் முயற்சியில் அரசு இறங்கியது.
ரூ.60,000 கோடி கடன்
60000 கோடி ரூபாய் கடனில் சிக்கியிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை எப்படியாவது விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுப் பல முறை முயற்சி செய்து தோற்றுப்போனது. ஆனால் இந்த முறை ஏர் இந்தியாவின் மொத்த அதிகாரத்தையும் தனியாருக்குக் கொடுக்கவும், கடன் நிலுவையில் பெரும் பகுதி அரசு ஏற்றுக்கொள்ள முடிவு செய்து ஏலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
போட்டி இல்லை
இந்த முறை உள்நாட்டு நிறுவனங்கள் முதல் வெளிநாட்டு நிறுவனங்கள் ஏர் இந்தியாவைக் கைப்பற்ற போட்டிப்போடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரசுக்கு கொரோனா மூலம் பெரும் ஏற்ற மாற்றம் மட்டுமே கிடைத்தது.
தகுதி இல்லை
ஏர் இந்தியாவை வாங்க சில நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பம் செய்திருந்த நிலையில், அதில் பல விண்ணப்பங்கள் ஏர் இந்தியா போன்ற பெரு நிறுவனத்தை நிர்வாகம் செய்யவும், அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லவும் தகுதி இல்லாமல் இருந்த காரணத்தால் பல விண்ணப்பங்களை அரசு நிராகரிப்புச் செய்யப்பட்டது.
டாடா சன்ஸ் மற்றும் ஸ்பைஸ்ஜெட்
இந்நிலையில் கடைசியாக ஏர் இந்தியா வாங்க விஸ்தாரா நிறுவனத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே தகுதியான நிறுவனமாகக் கருதப்பட்டு ஏல தொகையைச் சமர்ப்பிக்க அரசு அனுமதி அளித்தது.
செப்டம்பர் 15
இதன் படி செப்டம்பர் 15ஆம் தேதி டாடா சன்ஸ் மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்கள் ஏர் இந்தியாவைக் கைப்பற்ற ஏல விண்ணப்பம் சமர்ப்பித்தது. இதைத் தொடர்ந்து அடுத்தகட்ட பணிகளை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகமும், DIPAM அமைப்புச் செய்யத் துவங்கியது.
டாடா சன்ஸ் வெற்றி
இந்த ஏல தொகை விண்ணப்பம் அடிப்படையில் தற்போது டாடா சன்ஸ் நிறுவனம் தான் அதிகத் தொகையைக் கோரியுள்ளது எனத் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமித் ஷா தலைமையிலான குழு இறுதி ஒப்புதல் அளிக்கப்பட்டு அதன் பின்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிய வந்துள்ளது.
அரசு ஆய்வுக் குழு
அமித் ஷா தலைமையிலான குழுவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக அமைச்சரான பியூஷ் கோயல், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரான ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் இருப்பார்கள். டாடா சன்ஸ் மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களின் ஏல விண்ணப்பத்தைத் தணிக்கை செய்ததும் இந்தக் குழு தான்.
விற்பனை சொத்துக்கள்
மத்திய அரசு தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பிரிவின் 100 சதவீத பங்குகளையும், ஏர் இந்தியா SATS பிரிவின் 50 சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது. ஏர் இந்தியா மார்ச் 31, 2019ன் படி 60,074 கோடி ரூபாய்க் கடனில் உள்ளது.
கடன் பகிர்வு
இந்த மாபெரும் கடனில் 23,286.5 கோடி ரூபாய்க் கடன் சுமையை ஏர் இந்தியாவைக் கைப்பற்றும் நிறுவனம் ஏற்க வேண்டும். மீதமுள்ள கடன் தொகை, ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்விசஸ், ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் ஆகியவை Air India Assets Holding Ltd (AIAHL) ஏற்கிறது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications