ஏர் இந்தியாவின் புதிய சிஇஓ பதவி இந்தியருக்கு இல்லை.. டாடா சன்ஸ் முடிவு..?!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர் இந்தியா விமானச் சேவை நிறுவனம் அதீத கடனில் தத்தளிக்கும் காரணத்தால் விற்பனை செய்ய முடிவு செய்து டாடா சன்ஸ் ஏலத்தின் வாயிலாகக் கைப்பற்றியது.

இந்நிலையில் டிசம்பர் மாதமே ஏர் இந்தியா டாடா நிர்வாகத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஜனவரி 2022ல் ஏர் இந்தியா ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில் டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டிற்கு வரும் ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய சிஇஓ யார் என்ற கேள்வி தான் அனைவரிடத்திலும் உள்ளது.

 ஏர் இந்தியா

ஏர் இந்தியா

ஏர் இந்தியா நிறுவனம் மட்டும் அல்லாமல் ஏர் இந்தியா, விஸ்தாரா ஆகிய 3 நிறுவனங்களையும் இணைத்து நிர்வாகம் செய்ய வேண்டிய நிலை இருக்கும் காரணத்தால் புதிய சிஇஓ-வை தேர்வு செய்யும் பணி மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.

 புதிய சிஇஓ

புதிய சிஇஓ

தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி டாடா சன்ஸ், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரை தான் சிஇஓ-வாகத் தேர்வு செய்ய வேண்டும் என் உறுதியான முடிவை எடுத்துள்ளது டாடா சன்ஸ் நிர்வாகம். மேலும் ஏர் இந்தியா-வின் புதிய சிஇஓ தனது நிர்வாகக் குழுவைத் தேர்வு செய்யும் வாய்ப்பு அளிக்கப்படவும் டாடா சன்ஸ் திட்டமிட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 புதிய ஏர் இந்தியா நிர்வாகக் குழு

புதிய ஏர் இந்தியா நிர்வாகக் குழு

மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகக் குழு அதிகாரிகளை டாடா சன்ஸ் வெளியேற உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் டாடா சன்ஸ் உருவாக்கப் போகும் புதிய நிர்வாகக் குழுவில் டாடா சன்ஸ் M&A குழு, ஏவியேஷன் பிரிவு வல்லுனர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் தனிப்பட்ட தலைவராக நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 டேலெஸ் நிறுவனம்

டேலெஸ் நிறுவனம்

ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசிடம் இருந்து டேலெஸ் நிறுவனம் கைப்பற்றியது அனைவருக்கும் தெரியும். பொதுவாக டாடா குழுமத்தில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் கீழ் தான் வரும். அந்த வகையில் டேலெஸ் நிறுவனமும் டாடா சன்ஸ் கீழ் தான் வரும்.

 ஜனவரி 2022

ஜனவரி 2022

புதிய சிஇஓ குறித்த அறிவிப்பை ஏர் இந்தியா மத்திய அரசிடம் இருந்து டாடா கைகளுக்கு வரும் போதும் டாடா குழுமத்தின் டேலெஸ் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் டாடா சன்ஸ் தனது விமானச் சேவை நிறுவனங்களை ஏர் இந்தியா உடன் இணைத்து ஓரே நிறுவனமாக மாற்றத் திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது.

 இணைப்பு, லாபம்

இணைப்பு, லாபம்

டாடா குழுமத்தில் ஏற்கனவே இருக்கும் மலிவு விலை விமானச் சேவை நிறுவனமான ஏர் ஏசியா-வின் இந்திய பிரிவையும், பட்ஜெட் விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியாவின் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பிரிவையும் இணைக்க டாடா நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.

இதன் மூலம் இரு நிறுவனத்தைச் சிறப்பாக நிர்வாகம் செய்வது மட்டும் அல்லாமல் அதிகப்படியான செலவுகளும் குறைக்கப்படும்.

 ஏர் ஏசியா, விஸ்தாரா, ஏர் இந்தியா

ஏர் ஏசியா, விஸ்தாரா, ஏர் இந்தியா

டாடா குழுமத்தில் இருக்கும் மற்றொரு விமானச் சேவை நிறுவனமா விஸ்தாரா-வை ஏர் இந்தியாவுடன் இணைக்கத் தற்போது டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் மத்தியில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை சாத்தியப்படும் பட்சத்தில் ஏர் ஏசியா, விஸ்தாரா, ஏர் இந்தியா 3 நிறுவனங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு நாட்டின் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனமாக உருவெடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.

 உயர் அதிகாரிகள் வெளியேற்றம்

உயர் அதிகாரிகள் வெளியேற்றம்

சமீபத்தில் ஏர் இந்தியா நிர்வாகக் குழுவில் இருக்கும் நிர்வாக உறுப்பினர்களைப் பதவி விலக டாடா சன்ஸ் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஏர் இந்தியா நிர்வாகக் குழுவில் இருக்கும் 4 இயக்குநர்கள், 2 அரசு தரப்பு நாமினி இயக்குநர்கள், சேர்மன், நிர்வாக இயக்குநர்கள் என மொத்தம் 7 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பதவி விலக உள்ளதாகத் தெரிகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+