கடனில் சிக்கி தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசு பல முறை விற்பனை செய்யத் திட்டமிட்டுத் தோற்றுப்போன நிலையில், பல மாற்றங்களைச் செய்து இந்த முறை பெருமளவிலான ஏர் இந்தியா நிர்வாகத்தைத் தனியாருக்கும் அளிக்கவும், கடனில் பெரும் தொகையை அரசு ஏற்கவும் முடிவு செய்த காரணத்தால் விற்பனையில் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தைக் கைப்பற்றப் பல நிறுவனங்கள் போட்டிப்போட்டாலும், ஒவ்வொரு கட்ட ஆய்வு மற்றும் தகுதி சரிபார்ப்பில் விருப்பம் தெரிவித்த பல நிறுவனங்கள் தோல்வி அடைந்தது. இதில் ஏர் இந்தியா ஊழியர்கள் கூட்டணியும் ஒன்று.
இந்நிலையில் தற்போது ஏர் இந்தியா-வை கைப்பற்ற நாட்டின் இரு முக்கியமான விமானச் சேவை நிறுவனங்கள் ஏல தொகை விண்ணப்பத்தைக் கொடுத்துள்ளது.
ஏர் இந்தியா
இந்திய அரசுக்குச் சொந்தமான விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் இந்தியா-வை கைப்பற்றப் பல நிறுவனங்கள் போட்டிப்போட்டாலும், ஆரம்பம் முதல் வலிமையாகவும், உறுதியாகவும் போட்டிப்போட்டது இரு நிறுவனங்கள் மட்டுமே.
டாடா சன்ஸ், ஸ்பைஸ்ஜெட்
விஸ்தாரா, ஏர் ஏசியா போன்ற முன்னணி விமானச் சேவை நிறுவனங்களை நிர்வாகம் செய்து வரும் டாடா சன்ஸ் மற்றும் நாட்டின் மலிவு விலை விமானச் சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் ஆகியவை தான் கடைசிக் கட்டம் வரை தேர்வு செய்யப்பட்ட.
ஏல தொகை விண்ணப்பம்
தற்போது ஏர் இந்தியாவைக் கைப்பற்ற ஏல தொகை விண்ணப்பத்தை டாடா சன்ஸ் மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய இரு நிறுவனங்களும் சமர்ப்பித்துள்ளதாக, ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் பணிகளை நிர்வாகம் செய்யும் DIPAM அமைப்பின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஜோதிராதித்யா சிந்தியா
சமீபத்தில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதிவியேற்றிய ஜோதிராதித்யா சிந்தியா ஏர் இந்தியாவை விரைவாக விற்பனை செய்வதில் தீவிரமாக இருந்தார். அதனால் ஏல தொகை விண்ணப்பம் சமர்ப்பிக்க ஏற்கனவே அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 15ஆம் தேதியில் இருந்து எவ்விதமான நீட்டிப்போ அல்லது மாற்றமோ இருக்காது என அறிவித்தார்.
செப்டம்பர் 15
இதன் படி செப்டம்பர் 15ஆம் தேதி மாலைக்குள் டாடா சன்ஸ் மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்கள் ஏர் இந்தியாவை மொத்தமாகக் கைப்பற்றுவதற்கான ஏல தொகை விண்ணப்பத்தைக் கொடுத்துள்ளது.
பங்கு விற்பனை விபரங்கள்
தற்போது மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்தில் 100 சதவீத பங்குகளையும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பிரிவில் 100 சதவீத பங்குகளையும், ஏர் இந்தியா SATS பிரிவில் 50 சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது. ஏர் இந்தியா மார்ச் 31, 2019ன் படி 60,074 கோடி ரூபாய்க் கடனில் உள்ளது.
ஏர் இந்தியா-வில் அரசு பங்கீடு
இந்த மாபெரும் கடனில் 23,286.5 கோடி ரூபாய்க் கடன் சுமையை ஏர் இந்தியாவைக் கைப்பற்றும் நிறுவனம் ஏற்க வேண்டும். மீதமுள்ள கடன் தொகை, ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்விசஸ், ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் ஆகியவை Air India Assets Holding Ltd (AIAHL) ஏற்கிறது.
டிசம்பர்-க்குள் முடிவு
டாடா சன்ஸ் மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்கள் ஏர் இந்தியாவைக் கைப்பற்ற ஏல விண்ணப்பம் சமர்ப்பித்துள்ள நிலையில், அடுத்தகட்ட பணிகளை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகமும், DIPAM அமைப்புச் செய்ய உள்ளது. மத்திய அரசின் திட்டத்தின் படி டிசம்பர் மாத்திற்குள் ஏர் இந்தியாவை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications