அவனி தாவ்தா: 'பெத்த' காஃபி கடையில் பணியாற்றியவருக்கு இப்போது புதிய பதவி.. டாடா டூ மஹிந்திரா..!!

சாதிப்பதற்கு வயதோ, அனுபவமோ முக்கியமில்லை. மனஉறுதி, செயல்திறனுக்கான அர்ப்பணிப்பு, பிறருக்கான பொறுப்பு, புதுமையான தலைமை மற்றும் விடா முயற்சி ஆகியவை இருந்தாலே போதும் சாதித்து விடலாம். அதற்கு முன்னுதாரணமாக விளங்குபவர் அவனி தாவ்தா.

டாடா குழுமத்தின் இளம் தலைமை நிர்வாக அதிகாரி என்ற பெயர் பெற்றவர். டாடா ஸ்டார்பகஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான இவர் தற்போது ரூ.2,602 கோடி மதிப்பிலான மகிந்திரா லாஜிஸ்டிக்ஸின் சுயாதீன இயக்குனராக உயர்ந்துள்ளார். இவரது கணவர் விஷால் ஒரு தொழிலதிபர். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

அவனி தாவ்தா: 'பெத்த' காஃபி கடையில் பணியாற்றியவருக்கு இப்போது புதிய பதவி..  டாடா  டூ மஹிந்திரா..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் அவனி தாவ்தா. இவர் தனது பள்ளி படிப்பை முடித்தவுடன், புகழ் பெற்ற எச்.ஆர். வணிகம் மற்றும் பொருளாதார கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். வணிகத்தின் மீதான ஆர்வம் காரணமாக,நர்சி மோஞ்சி இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸில் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

பின்பு 2002ல் மதிப்பிற்குரிய டாடா நிர்வாக சேவைகளுக்கு (டி.ஏ.எஸ்.) விண்ணப்பித்தார். இதன் மூலம் வணிக உலகில் தனது முதல் அடியை எடுத்து வைத்தார். தாஜ் ஹோட்டல்ஸ் என பிரபலமாக அறியப்படும் இந்தியன் ஹோட்டல் நிறுவனம் மற்றும் இன்பினிட்டி ரீடெய்ல் லிமிடெட் ஆகியவற்றில் பணிபுரியும் போது அவர் அதிக அனுபவம் மற்றும் வர்த்தக அறிவையும் பெற்றார்.

அவருக்கு டாடா குழுமத்தின் அர்ப்பணிப்புள்ள ஊழியரான ஆர்.கே. கிருஷ்ண குமார் வழிகாட்டினார். அவனியின் ஆற்றல் மற்றும் விதிவிலக்கான குணங்களால் ஈர்க்கப்பட்ட கிருஷ்ண குமார், டாடா குளோபல் பெவரேஜஸ் லிமிடெட் மற்றும் ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனங்களுக்கு இடையேயான முக்கியமான ஒத்துழைப்பை முன்னெடுப்பதற்கு தனிப்பட்ட முறையில் தவனி தாவ்தாவை தேர்ந்தெடுத்தார்.

இதனையடுத்து தனது 33 வயதில் அவர் டாடா ஸ்டார்பக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். மேலும் டாடா குழுமத்தின் இளம் தலைமை நிர்வாக அதிகாரி என்ற பெருமையும் பெற்றார். இது அவரது புகழில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

டாடா ஸ்டார்பக்ஸ் தொடங்கிய 3 ஆண்டுகளில் 6 நகரங்களில் 85க்கும் மேற்பட்ட ஸ்டோர்கள் தொடங்கப்பட்டது.ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் வருவாய் கடந்த நிதியாண்டில் ரூ.1,000 கோடி கடந்தது குறி்ப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக சில ஆண்டுகள் பணியாற்றினார்.

பின்னர் 2016ல் அந்த வேலையிலிருந்து விலகி கோத்ரேஜ் நேச்சர்ஸ் பாஸ்கெட் லிமிடெட் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக பணியாற்றினார். தற்போது அவனி தாவ்தா பிரையன் அட்வைசரி நெட்வார்க் நிறுவனத்தின் யுக்தி ஆலோசகராகவும், மகிந்திரா லாஜிஸ்டிக்ஸின் சுயாதீன இயக்குனராகவும் பணியாற்றுகிறார். மகிந்திரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.2,602 கோடியாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+