கடந்த செப்டம்பர் காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிகரலாபம் 5.90 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், இதே இதன் லாபம் 3,302.31 கோடி ரூபாயாக உள்ளது.
கடந்த மாதத்தில் மத்திய அரசின் கார்ப்பரேட் வரி சலுகையானது பெரும் அளவில் இதன் நிகரலாபத்திற்கு கைகொடுத்ததாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதே ஒருங்கிணைந்த அடிப்படையில் வரிக்கு முந்தைய லாபம் 7 கோடி ரூபாய் நஷ்டம் என்றும், இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் வரிக்கு முந்தைய லாபம் 5,411.10 கோடி ரூபாயாக இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதே ஒருங்கிணைந்த வருவாய் 15.7 சதவிகிதம் குறைந்து, 34,762.73 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு 41,257.66 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு குறைந்த விற்பனை ஒரு முக்கிய காரணமாகும். மேலும் ஒரு புறம் விலைகள் வீழ்ச்சியடைந்து மறுபுறம் தேவை காரணமாக பாதிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
எனினும் இனி ஸ்டீல் விலை நிலையாக உள்ளதாகவும் ஆய்வாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் குறைந்த மூலப்பொருட்களின் விலைகளால், நடப்பு காலாண்டில் இதன் எதிரொலி காணப்படலாம். குறிப்பாக ஐரோப்பிய வணிகத்தில் இதன் எதிரொலி காணப்படலாம்.
எவ்வாறயினும் உலகளாவிய கவலைகள் பலவீனமடைந்து வருவதால், நிறுவனம் அதன் கடனை எவ்வாறு குறைக்கும் என்பதில் நீண்டகால கவலைகள் உள்ளன.
இந்த நிலையில் இதன் நிகர கடன் 4 சதவிகிதம் அதிகரித்து, 1.07 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்காக இந்த நிறுவனம் 1,871 கோடி ரூபாய் வட்டி மட்டும் செலுத்தியுள்ளதாகவும் இந்த நிறுவனம் கூறியுள்ளது. .
மேலும் வரவிருக்கும் காலாண்டுகளில், ஸ்டீலின் முக்கிய நுகர்வோரான ஆட்டோமொபைல் துறையில் இதன் தேவை அதிகரிக்கும் பட்சத்தில் ஸ்டீல் துறையில் பொதுவான ஒரு ஏற்றம் காணப்படும். இதனால் ஸ்டீல் துறையும் மேம்பட வாய்ப்புகள் உள்ளதாகவும், இது அடுத்து வரும் காலாண்டுகளில் சரியாகலாம் என்றும் கூறப்படுகிறது. அதிலும் மத்திய அரசின் சலுகைகளால், இது இன்னும் கூடும், இது உற்பத்தி துறையையும் இன்னும் மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
என்னதான் இந்த நிறுவனத்தின் லாபம் அதிகரித்தாலும் வருவாய் குறைந்துள்ளதால், இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது தற்போது 3 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு 392 ரூபாயாக காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications