கடந்த அக்டோபர் - டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் லாபம் 4,010 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய இரண்டாவது ஸ்டீல் உற்பத்தியாளரான டாடா ஸ்டீல் நிறுவனம், முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 1,228 கோடி ரூபாய் நஷ்டத்தினைக் கண்ட நிலையில், இந்த ஆண்டில் நஷ்டத்தில் கிட்டதட்ட மூன்று மடங்கு லாபம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஸ்டீல் தேவை அதிகரித்துள்ள நிலையில், டாடா ஸ்டீல் அதன் ஐரோப்பிய செயல்பாட்டின் மூலமும் லாபம் கண்டுள்ளது. இதன் காரணமாக ஒட்டுமொத்த லாபத்திலும் வலுவான ஏற்றத்தினைக் கண்டுள்ளது.
எகிறிய வருவாய்
இதே ப்ளூம்பெர்க் நிபுணர்கள் இந்த லாபம் 3,227.60 கோடி ரூபாயாக இருக்கும் என்று கணித்திருந்த நிலையில், கணிப்புகளையும் மீறி 4 ஆயிரம் கோடியையும் தாண்டி லாபம் கண்டுள்ளது.
இதே ஒருங்கிணைந்த வருவாய் 11 சதவீதம் அதிகரித்து, 39,809 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது நிபுணர்களின் கணிப்பான 38,982.40 கோடி ரூபாயினை விட 14 சதவீதம் அதிகரித்துள்ளது.
4 முறை விலை அதிகரிப்பு
இந்திய ஸ்டீல் உற்பத்தியாளரான டாடா ஸ்டீல் இந்த காலாண்டில் மட்டும் நான்கு முறை விலையை உயர்த்தியுள்ளது. சர்வதேச அளவிலும் விலை அதிகரித்துள்ள நிலையில், இந்த விலை அதிகரிப்பானது இருந்ததாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட ஸ்டீல் இருப்பானது இந்த விலை அதிகரிப்பினை சமாளிக்க உதவியதாக கூறப்படுகிறது.
தேவை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது
அதோடு பொருளாதார வளர்ச்சியானது, மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில் ஸ்டீல் தேவையும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாக டாடா ஸ்டீலில் தலைமை நிர்வாக அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான டிவி நரேந்திரன் கூறியுள்ளார். மேலும் ஏற்றுமதியை குறைத்து, உள்நாட்டு சப்ளையை உன்னிப்பாக கவனித்து அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.
வாகன பிரிவில் நல்ல வளர்ச்சி
மேலும் அனைத்து பிரிவுகளுக்கும், குறிப்பாக வாகன பிரிவிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டன. வலுவாக வாடிக்கையாளர் உறவுகள், பிராண்டுகள், புதிய தயாரிப்புகள் ஆகியவற்றில் எங்கள் கவனம் இருந்தது. இதே டாடா ஸ்டீல் இதுவரை இல்லாத அளவு இந்த காலாண்டில் எபிடாவை 8,811 கோடி ரூபாயாக கண்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் கிட்ட இருமடங்கு என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
Crude steel உற்பத்தி
இதே Crude steel உற்பத்தியானது மீண்டும் வலுப்பெற்றுள்ளதாகவும், இது முந்தைய ஆண்டினை காட்டிலும் 3% சதவீதம் அதிகரித்து 4.6 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. இதே இந்த நிறுவனத்தின் மொத்த செலவினம் 34,183 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இந்த பங்கு விலையானது பிஎஸ்இ-யில் டாடா ஸ்டீல் பங்கின் விலையானது 1.28% குறைந்து 690.25 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
வாகன துறையில் அதிகரிக்கலாம்
வரவிருக்கும் காலாண்டுகளில், ஸ்டீலின் முக்கிய நுகர்வோரான ஆட்டோமொபைல் துறையில் இதன் தேவை அதிகரிக்கும்பட்சத்தில் ஸ்டீல் துறையில் பொதுவான ஒரு ஏற்றம் காணப்படும். இதனால் ஸ்டீல் துறையும் மேம்பட வாய்ப்புகள் உள்ளதாகவும், இதுனால் அடுத்து வரும் காலாண்டுகளிலும் லாபம் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications