இந்தியாவின் முன்னணி ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் செப்டம்பர் காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டு உள்ளது.
இக்காலாண்டில் இந்தியா முதல் அமெரிக்கா வரையில் பெரும்பாலான நிறுவனங்கள் மந்தமான முடிவுகளை வெளியிட்டு முதலீட்டாளர்களைச் சோகத்தில் ஆழ்த்தி வரும் நிலையில் டாடா ஸ்டீல் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
டாடா ஸ்டீல் முடிவுகளைக் கண்டு இந்நிறுவன முதலீட்டாளர்கள் சோகத்தின் உச்சத்தில் உள்ளனர்.
டாடா ஸ்டீல்
டாடா குழுமத்தின் மிகவும் முக்கியமான வர்த்தக நிறுவனமாக இருக்கும் டாடா ஸ்டீல் செப்டம்பர் காலாண்டு லாபம் அளவு கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சுமார் 87 சதவீதம் சரிந்து வெறும் 1,514 கோடி ரூபாய் மட்டுமே பெற்றுள்ளது. இதேபோல் டாடா ஸ்டீல் இக்காலாண்டில் 59,877.5 கோடி ரூபாய் என்ற 1 சதவீதம் குறைவான வருமானத்தைப் பெற்று உள்ளது.
EBITDA அளவு
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் லாபம் குறைய மிகவும் முக்கியமான காரணம் அதிகப்படியான செலவுகளும், மந்தமான ஆப்ரேட்டிங் மார்ஜின் தான். டாடா ஸ்டீல் நிறுவனத்தின் EBITDA அளவு 62 சதவீதம் சரிந்து 6,060.4 கோடி ரூபாயாகவே உள்ளது.
அப்ரேட்டிங் மார்ஜின்
இக்காலாண்டில் அப்ரேட்டிங் மார்ஜின் 17.13 சதவீதம் சரிந்து 10.12 சதவீதமாக உள்ளது, இதேபோல் உற்பத்தி பொருள் விலை கடந்த ஆண்டை காட்டிலும் 57 சதவீதம் அதிகரித்துள்ளது.
வர்த்தகம்
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் இந்திய வர்த்தகம் வளர்ச்சி காலாண்டு அடிப்படையில் 21 சதவீதமும், வருடாந்திர அடிப்படையில் 7 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் ஐரோப்பிய சந்தையில் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது. மேலும் குளிர்காலத்தில் சீனாவின் உற்பத்தி குறையும் நிலையில் டாடா ஸ்டீல் வர்த்தகம் அதிகரிக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
உலோக வர்த்தகம்
டாடா குழுமம் தனது உலோக வர்த்தகத்தில் செலவுகளைக் குறைக்கவும், செயல்திறனை அதிகரிக்கவும், அப்ரேட்டிங் மார்ஜின் அளவுகளை அதிகரிக்க டி வி நரேந்திரன் தலைமையில் டாடா குழுமத்தில் இருக்கும் 7 உலோகம் சார்ந்த நிறுவனங்களை டாடா ஸ்டீல் நிறுவனத்துடன் இணைக்க உள்ளதாகச் சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
7 உலோக நிறுவனங்கள்
டாடா குழுமத்தில் இருக்கும் 7 உலோக நிறுவனங்களான டாடா ஸ்டீல் லாங் ப்ராடெக்ட்ஸ், டாடா மெட்டாலிங்க்ஸ், டின்பிளேட் கம்பென் ஆப் இந்தியா, TRF, இந்தியன் ஸ்டீல் & வயர் ப்ராடெக்ட்ஸ், டாடா ஸ்டீல் மைனிங், S&T மைனிங் ஆகியவற்றை டாடா ஸ்டீல் நிறுவனத்தில் இணைக்கப்பட உள்ளது.
டாடா ஸ்டீல் பங்கு விலை
தேசிய பங்குச்சந்தையில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்கு விலை இன்றைய வர்த்தக முடிவில் 0.49 சதவீதம் சரிந்து 101.10 ரூபாயாக உள்ளது. டாடா ஸ்டீல் பங்குகள் கடந்த ஒரு மாதத்தில் 2.80 சதவீதம் உயர்ந்துள்ளது, 2022 ஆம் ஆண்டில் 11.51 சதவீதம் சரிந்துள்ளது. இதன் மூலம் தற்போது டாடா ஸ்டீல் சந்தை மதிப்பு 1.24 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications