டாடா ஸ்டீலின் பங்கு விலையானது இன்று 7 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இது அந்த நிறுவனம், அதன் வலுவான வளர்ச்சியினை பதிவு செய்துள்ள நிலையில் வந்துள்ளது.
இன்று இண்டிராடே வர்த்தகத்தில் மட்டும், இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது பிஎஸ்இ-யில் 7.6% ஏற்றம் கண்டு, அதன் 52 வார உச்சமான 529.5 ரூபாயினை தொட்டுள்ளது.
கடந்த மூன்று வர்த்தக அமர்வுகளில் மட்டும் இந்த நிறுவன பங்கின் விலையானது 11.22% ஏற்றம் கண்டுள்ளது.
டாடா ஸ்டீல் பங்கு விலை
டாடா ஸ்டீல் பங்கு விலையானது தொடக்கத்திலேயே 2.56% ஏற்றத்துடன், 504.70 ரூபாய் என்ற நிலையில் தொடங்கியது. இதற்கிடையில் டாடா ஸ்டீல் பங்கு விலையானது 5 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள் மற்றும் 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜிக்கு மேலேயே காணப்படுகிறது.
டாடா ஸ்டீல் ஆண்டு நிலவரம்
இந்த பங்கின் விலையானது ஒரு வருடத்தில் 33.24% ஏற்றத்திலும், இதே இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 11.33% ஏற்றத்திலும் காணப்படுகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் 16.54 லட்சம் பங்குகள் கைமாறியுள்ளது. இதன் மூலம் 86.27 கோடி ரூபாய் தொகை பிஎஸ்இ-யில் கைமாறியுள்ளது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 60,274 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
எபிடா எவ்வளவு?
இந்த நிறுவனம் கடந்த ஆண்டினைக் காட்டிலும் எபிடா (EBITDA ) 60 சதவீதம் அதிகரித்து, 6,110 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே இந்த நிறுவனத்தின் இந்திய செயல்பாடு கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது 4.1 மடங்கு அதிகரித்துள்ளது. இது கடந்த காலாண்டை விட, 49% அதிகரித்து 6,025 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஒருங்கிணைந்த லாபம் சரிவு
எப்படி இருந்தாலும், ஒருங்கிணைந்த நிகரலாபம் 50 சதவீதம் குறைந்து, 1,665.07 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 3,302.31 கோடி ரூபாயாக இருந்தது.
இந்த நிலையில் மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் இந்த நிறுவனத்தின் பங்கு விலையை நியூட்ரலாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.
மூன்றாவது காலாண்டில் எதிர்பார்ப்பு
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த எபிடா கடந்த ஆண்டை காட்டிலும் 60% அதிகரித்து, 6,110 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் மூன்றாவது காலாண்டில் வலுவான வளர்ச்சியினை பதிவு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 7,160 கோடி ரூபாயாக இருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 98% அதிகரிக்கலாம் என்றும் கணித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications