மத்திய அரசு வெளியிட்டு உள்ள 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் ரயில்வே துறைக்கு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், மும்பை பங்குச்சந்தையில் இருக்கும் ஸ்டீல் நிறுவன பங்குகள் தாறுமாறான உயர்வைப் பதிவு செய்துள்ளது.
இதனால் ஸ்டீல் முதலீட்டாளர்கள் கடந்த சில மாதங்களாக எதிர்கொண்டு வந்த தடுமாற்றத்தை இன்று ஒரு நாளில் மீட்டு உள்ளனர்.
400 புதிய வந்தே பாரத் ரயில்கள்
2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் மத்திய அரசு அடுத்த 3 வருடத்தில் புதிய தலைமுறை 400 வந்தே பாரத் ரயில்களை அறிமுகம் செய்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கார்கோ ரெட்மினல்
இதேபோல் ரயில் சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்த 100 பிஎம் கதி சக்தி கார்கோ ரெட்மினல்கள் அடுத்த 3 வருடத்தில் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் ரயில் சரக்கு போக்குவரத்து பெரிய அளவில் மேம்படுத்தப்படும்.
ஸ்டீல் நிறுவன பங்குகள்
ரயில் தயாரிப்புகள் ஸ்டீல் தேவை அதிகரிக்கும் நிலையில் ஸ்டீல் நிறுவன பங்குகள் தாறுமாறாக உயர துவங்கியுள்ளது. இதன் எதிரொலியாக டாடா ஸ்டீல் பங்குகள் (TATASTEELPP) 12.71 சதவீதமும், ஸ்டீல் அத்தாரிட்டி 0.25 சதவீதமும், டாடா ஸ்டீல் (TATASTEEL) பங்குகள் 2.65 சதவீதம், JSW ஸ்டீல் 1.26 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
பட்ஜெட் துவங்கும் முன் தடுமாறி வந்த மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்பு 909.51 புள்ளிகள் உயர்ந்து 58,923.68 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு 254.70 புள்ளிகள் உயர்ந்து 17,594.55 புள்ளிகளையும் எட்டியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications