கொல்கத்தா: ஸ்டீல் சந்தையில் தனக்கென ஒரு தனி இடத்தினை கொண்டுள்ள டாடா ஸ்டீல் நிறுவனம், இந்தியாவினை சேர்ந்த ஒரு பெரிய கார்ப்பரேட் குழுமமாக இருந்தாலும், உலகம் முழுவதிலும் சுமார் 26 இடங்களில் தனது ஆதிக்கத்தினை செலுத்தி வருகிறது.
சொல்லப்போனால் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமான டாடா ஸ்டீல் நிறுவனம், சர்வதேச அளவில் சுமார் 27.5 மில்லியன் டன் உற்பத்தியை செய்கிறது.
இதே இந்தியாவில் சுமார் 13 மில்லியன் டன் உற்பத்தியை செய்து வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டுமானால் 2019ம் ஆண்டளவில் சுமார் 10,218 கோடி ரூபாய் நிகர வருவாயாக கொண்டுள்ளது. இதே காலத்தில் சுமார் 32,984 ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். அந்தளவுக்கு மிகப்பெரிய ஒரு நிறுவனமாக உள்ளது.
உற்பத்தி பாதிப்பு
இந்த நிலையில் நமது அண்டை நாடான சீனாவில் கொரோனா வைரஸால் 3000 பேருக்கு மேல் இறந்துள்ள நிலையில், அந்த நாட்டின் மொத்த உற்பத்தி தொழில் சாலைகளும் முடங்கி போயுள்ளன. தற்போது தான் ஆங்காங்கே சில இடங்களில் துளிர் விடத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இப்போதும் கூட சரியான ஆட்கள் இல்லாததால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
மூலப்பொருட்களுக்காக ஆர்டர்
இதனால் சீனாவின் வழக்கமான உற்பத்தியில் 50 - 70% இருந்தாலே அது பெரிய விஷயம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சீனாவினை முக்கிய மூலப் பொருட்களுக்காக நம்பியுள்ள சில இந்திய உற்பத்தி நிறுவனங்கள், மூலப்பொருட்களுக்காக மற்ற நாடுகளை நாடத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் இது குறித்த அறிந்த முக்கிய அதிகாரி ஒருவர், டாடா ஸ்டீல் மாற்று சந்தைகளில் ஆர்டர்களை வழங்கத் தொடங்கியுள்ளதாக லைவ் மின்ட் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தற்போதைக்கு எந்த பிரச்சனையும் இல்லை
இந்த நிறுவனம் ஏற்கனவே நெருக்கடியை சந்தித்துள்ளதாக டாடா ஸ்டீலில் நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டிவி நரேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இது குறித்து கூறியதாக வெளியான செய்தியில், நாங்கள் சீனாவிலிருந்து சில நுகர்வோர் பொருட்களை பெறுகிறோம். சீனாவில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையினால் நாங்கள் இடரினை கண்டுள்ளோம். எனினும் எங்கள் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்றும் சிஐஐ வருடாந்திர கூட்டத்தின் போது கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மற்ற நாடுகளில் ஆர்டர்
மேலும் பிரேசில் மற்றும் துருக்கி போன்ற மாற்று ஆதாரங்களை நிறுவனம் கொண்டுள்ளது. அங்கும், ஆர்டர்களை செய்துள்ளது. சொல்லப்போனால் விலை கூட அதிகம் தான் என்றும் கூறியுள்ளார். மேலும் பயனற்ற இரும்புகள், ஸ்டீல் மில் ரோல்கள், மின்முனைகள் மற்றும் மாங்கனிசு ஆகியவை சீனாவிலிருந்து பெறப்படுகின்றன என்றும் மற்ற மூத்த அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஸ்டீல் துறையில் மீள்ச்சி காண தொடங்கியுள்ளது
மேலும் இந்தியாவின் சந்தை நிலைமை பற்றி கூறிய நரேந்திரன், தற்போது தான் சந்தைகள் மீளத் தொடங்கியுள்ளன. ஆக செப்டம்பர் மாதத்திற்குள் ஸ்டீல் தொழில் மீண்டும் உச்ச விலையை காணும் என்று நம்புகிறோம். ஆனால் கொரோனா தாக்கமானது தற்போது பெரிய சவாலாக உள்ளது. ஏனெனில் ஒவ்வொரு மாதமும் ஸ்டீல் விலை அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
விலை அதிகரிப்பு
கடந்த நவம்பர் மாதத்தில் டன்னுக்கு 32,250 ரூபாயாக இருந்த நிலையில், இது தற்போது 37,000 தொட்டுள்ளது. எனினும் கடந்த ஆண்டில் அதிகபட்சமான 46,000 ரூபாயுடன் ஒப்பிடும்போது இது குறைவு தான். தற்போது சீனாவில் 20 - 30 மில்லியன் சரக்குகளை உருவாக்குவது ஒரு கவலையாகவே உள்ளது. அவர்கள் வைரஸினை விட்டு வெளியேறினால் மட்டுமே, நாம் பொருளாதாரத்தில் பச்சை துளிர்களை காண முடியும் என்றும் கூறியுள்ளார்..
விரைவில் மீண்டு வரும்
மேலும் ஆட்டோமொபைல் துறை மற்ற துறைகள் முன்னேற்றம் காட்டுகின்றன. எனினும் செப்டம்பர் மாதத்திற்குள் ஆட்டோபிரிவும் மீண்டு வரலாம். அப்போது அத்துறையில் இருந்து தேவை அதிகரிக்கலாம். ஸ்டீலின் மொத்த பயன்பாட்டில் ஆட்டோதுறையில் 15 -16 சதவிகிதம் உள்ளது. ஆக இதுவும் ஸ்டீல் துறைக்கு கைகொடுக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications