அடிசக்க.. ஒரே நாளில் 13% உயர்ந்த டாடா பங்குகள்.. நீங்க இதுல முதலீடு செஞ்சிருக்கீங்களா..?

டாடா குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகத்தில் தொடர்ந்து பிரச்சனை நீடித்து வந்தாலும், பங்குச்சந்தையிலும், வர்த்தகத்திலும் டாடா குழும நிறுவனங்கள் மாஸ் காட்டி வருகிறது.

சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் வணிக வாகனங்கள் பிரிவு இத்தாலி நாட்டின் மிகப்பெரிய வணிக வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான Iveco Group-ன் 89.42 சதவீத பங்குகளை வாங்கி தனது கிளை நிறுவனமாக மாற்றி வருடத்திற்கு 6,00,000 வாகனங்களைத் தயாரிக்கும் திறன் கொண்ட உலகின் 4வது பெரிய கமர்சியல் வாகன தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

அடிசக்க.. ஒரே நாளில் 13% உயர்ந்த டாடா பங்குகள்.. நீங்க இதுல முதலீடு செஞ்சிருக்கீங்களா..?

இதை தொடர்ந்து இன்று பங்குச்சந்தையில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் மத்தியில் பிரபலமில்லாத டாடா டெலிசர்வீசஸ் (மகாராஷ்டிரா) நிறுவனப் பங்குகள் தடாலடியாக 13 சதவீதம் வரையில் உயர்ந்தது.

இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 1718 புள்ளிகள் அதிகரித்து 81,028 புள்ளிகளைத் தொட்டு உள்ளது. இதேபோல் நிப்டி 50 குறியீடு 492.75 புள்ளிகள் உயர்ந்து 25000 புள்ளிகளைப் பல வாரங்களுக்குப் பின்பு தொட்டு உள்ளது.

Also Read

இதற்கு மத்தியில் டாடா டெலிசர்வீசஸ் பங்குகள் தடாலடியாக உயர்ந்து அதன் முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் டாடா டெலிசர்வீசஸ் (மகாராஷ்டிரா) பங்கு விலை 12.62 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு பங்கு விலை 39.89 ரூபாயாக உயர்ந்தது, இதன் மூலம் மும்பை பங்குச்சந்தையில் இதன் சந்தை மதிப்பீடு 7800.16 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்த வாரத்தில் 16.12 சதவீதமும், 2 வாரத்தில் 4.40 சதவீதமும், ஒரு மாதத்தில் 16.94 சதவீதமும், ஒரு வருடத்தில் 26.88 சதவீதமும், 2 வருடத்தில் 45.75 சதவீதமும் உயர்ந்துள்ளது.

Also Read

டாடா டெலிசர்வீசஸ் (மகாராஷ்டிரா) பங்குகளின் 52 வார உயர்வின் விலை 55.60 ரூபாயாக இருக்கும் வேளையில் தற்போது Bull Run-ல் இந்த அளவீட்டை எட்டுமா என்பது பெரும் கேள்வியாக உள்ளது.

டாடா டெலிசர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களில் வயர்டு மற்றும் வயர்லெஸ் தொலைத்தொடர்பு சேவைகள் வழங்கி வருகிறது.

மகாராஷ்டிரா மற்றும் கோவா ஆகிய இரு மாநிலங்களில் வயர்லைன் வாய்ஸ் சேவைகள், டேட்டா சேவைகள் என பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+