டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம், ஜெர்மனி நாட்டின் பிரபல கார் நிறுவனமான பி.எம்.டபிள்யூ குழுமத்துடன் இணைந்து மென்பொருள் துறையில் புதிய கூட்டணி நிறுவனத்தை உருவாக்க உள்ளதாகச் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
இந்த புதிய கூட்டு முயற்சி மூலம், இந்தியாவில் டாடா டெக்னாலஜிஸ் மற்றும் BMW ஆட்டோமேட்டெட் டிரைவிங்-க்கிற்கு தேவையான கார் தொழில்நுட்பம், கார் டேஷ்போர்டு மென்பொருள் உள்ளிட்ட பல்வேறு வாகன தொழில்நுட்பங்களை உருவாக்கும் பணிகளை இரு நிறுவனங்களும் இணைந்து மேற்கொள்ளும் என்று டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த ஒப்பந்தம் குறித்த நிதி விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

புதிதாக உருவாக்கப்படும் இந்த கூட்டு நிறுவனத்தில், டாடா டெக்னாலஜிஸ் மற்றும் பி.எம்.டபிள்யூ குழுமம் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே தலா 50 சதவீத பங்குகளை வைத்திருக்கும் என்று டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு பிரிவான டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம், கார், விமானம் மற்றும் கனரக இயந்திர தயாரிப்பு நிறுவனங்களுக்கு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வருகிறது.
இந்த புதிய கூட்டு முயற்சி மூலம், உலகளவில் முன்னணியில் இருக்கும் ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், இந்தியாவின் பொறியியல் துறை மேலும் வலுப்பெற வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டு முயற்சி மூலம் உருவாக்கப்படும் மென்பொருட்கள் எதிர்கால தானியங்க கார் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும். டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம், இந்த கூட்டு முயற்சி மூலமாக உலகளாவிய அளவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்த கூட்டு முயற்சி, இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தி மற்றும் தானியங்கி வாகன தொழில்நுட்ப துறைகளின் வளர்ச்சிக்கு உதவும்.
டாடா குழுமத்தில் சமீபத்தில் ஐபிஓ மூலம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் டாடா டெக்னாலஜிஸ். சில வாரங்களுக்கு முன்பு இந்நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியாக சுகன்யா சதாசிவன் நியமிக்கப்பட்டார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
தமிழ்நாட்டில் பிறந்த சுகன்யா பாரதியார் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சையின்ஸ் மற்றும் இன்பர்மேட்டிக்ஸ் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். ஐடி துறையில் மட்டுமே சுமார் 33 வருடங்களுக்கு அதிகமான பணியாற்றியுள்ளார் சுகன்யா சதாசிவன். டாடா டெக்னாலஜிஸ் முன்பு டிசிஎஸ் நிறுவனத்தில் பல்வேறு மூத்த தலைமை பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
டாடா டெக்னாலஜிஸில் சேருவதற்கு முன்பு, சுகன்யா அவர்கள் டிசிஎஸ் நிறுவனத்தில் மூத்த துணைத் தலைவர் மற்றும் தலைமை தகவல் அதிகாரி பதவியை வகித்தார். டிசிஎஸ் நிறுவனத்தின் மூலோபாய மாற்ற முயற்சிகளுக்குத் தலைமை தாங்கினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டாடா டெக்னாலஜிஸ், கோயம்புத்தூரில் தனது முதல் இன்னோவேஷன் சென்டரை திறந்தது. இந்த அலுவலகம் கோவையின் பிரபலமான சரவணம்பட்டியில் வியா வொர்க்ஸ்பேஸ்-ல் திறக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications