டாடா குழுமத்தின் இன்ஜினியரிங் டெக்னாலஜி சேவை நிறுவனமான டாடா டெக்னாலஜிஸ், 2024 ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 27.41 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.216.56 கோடியாக இருந்த லாபம், இந்த காலாண்டில் ரூ.157.24 கோடியாக குறைந்துள்ளது. டாடா டெக்னாலஜிஸ் சமீபத்தில் ஐபிஓ மூலம் டாடா குழுமத்தில் இருந்து பங்குச்சந்தைக்கு வந்த நிறுவனமாகும். இதைவிட முக்கியமாக முதல் முறையாக முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகை கொடுத்துள்ளது.

இதேபோல் ஒருங்கிணைந்த வருவாய் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 7.2 சதவீதம் குறைந்து ரூ.1,301 கோடியாக பதிவாகியுள்ளது. கடந்த நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் வருவாய் ரூ.1,402.40 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மோசமான காலாண்டு முடிவுகள் காரணமாக டாடா டெக்னாலஜிஸ் பங்கு விலை இலக்குகளை பல தரகு நிறுவனங்கள் தற்போதைய சூழ்நிலையை மையமாக வைத்து அப்டேட் செய்துள்ளது. உள்நாட்டு பங்கு தரகு நிறுவனமான ஜே.எம். பைனானிசியல் நிறுவனம், டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்திடம் முன்பை விடவும் அதிக வளர்ச்சி திறன் கொண்ட பல பிரிவுகளை தற்போது கொண்டுள்ளது என கருத்து தெரிவித்துள்ளது.
இதனால் ஜே.எம். பைனானிசியல் நிறுவனம், டாடா டெக்னாலஜிஸ் பங்கிற்கு "BUY" என்ற ரேட்டிங்கை கொடுத்துள்ளது, இதோடு ஒரு வருட இலக்கு விலையாக ரூ.1410 நிர்ணயித்துள்ளது. இது தற்போதைய விலையில் சுமார் 30 சதவீத லாபத்தை அளிக்கும் வாய்ப்பைக் குறிக்கிறது.
இதேபோல் உலகளாவிய பங்கு தரகர் நிறுவனமான பேங்க் ஆப் அமெரிக்கா (BofA) டாடா டெக்னாலஜிஸ் மீது "BUY" ரேட்டிங்-ஐ தொடர்ந்துள்ளதுடன், ஒரு பங்கிற்கு ரூ.1,250 என்ற இலக்கு விலையையும் நிர்ணயித்துள்ளது.
ஆனால், உலகளாவிய பங்கு தரகர் நிறுவனமான ஜே.பி. மோர்கன் மார்ச் காலாண்டு முடிவுகளுக்குப் பின்பு Underweight ரேட்டிங்-ஐ இருப்பதாக தெரிவித்துள்ளதும், முன்பே இதே Underweight ரேட்டிங் கொடுக்கப்பட்ட நிலையில், டார்கெட் விலையாக ரூ.800 ஆக நிர்ணயித்துள்ளது.
டாடா டெக்னாலஜிஸ் 2024 நிதியாண்டில் தனது முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு 8.40 ரூபாய் இறுதி ஈவுத்தொகையாகவும், 1.65 ரூபாய் சிறப்பு ஈவுத்தொகையாகவும் கொடுத்துள்ளது. அதாவது 2 ரூபாய் முக மதிப்புடைய டாடா டெக்னாலஜிஸ் ஒரு பங்கிற்கு 10.05 ரூபாய் ஈவுத்தொகையை அறிவித்துள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications