இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் அதிக மதிப்புடைய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக விளங்கும் டாடா குழுமம் பல வருடங்களுக்கு பின்பு தனது நிறுவனத்தை ஐபிஓ வெளியிட முடிவு செய்து பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி-யிடம் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தை பட்டியலிடுவதற்காக ஐபிஓ விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது.
இந்த ஐபிஓ முழுக்க முழுக்க ஆஃபர் பார் சேல் தான், புதிய பங்கு வெளியீடுகள் இல்லை என்பதை முன்கூட்டியே தெளிவுப்படுத்தியுள்ளது. இதன் மூலம் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஐபிஓ-வை அதன் முக்கிய பங்குதாரர்களாக இருக்கும் டாடா மோட்டார்ஸ் மற்றும் இதர இரண்டு பங்குதாரர்களுடன் இணைந்து வெளியிடப்படுகிறது.
டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வர்த்தகம் என்ன..? இந்த நிறுவனத்தில் டாடா மோட்டார்ஸ் எவ்வளவு பங்குகளை வைத்துள்ளது..? டாடா மோட்டார்ஸ் இந்த ஐபிஓ முயற்சி எதற்காக..?
டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ்-ன் கிளை நிறுவனமான டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிட செபி அமைப்பியம் மார்ச் 9 ஆம் தேதி DRHP அறிக்கையை சமர்ப்பித்துள்ளது என்பது மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் என அறிவித்துள்ளது.
டாடா டெக்னாலஜிஸ் ஐபிஓ
இந்த ஐபிஓ மூலம் டாடா டெக்னாலஜிஸ் தனது மொத்த பங்குகளில் சுமார் 23.60 சதவீத பெய்டு அப் ஷேர் கேப்பிடல் பங்குகளை offer for sale (OFS) முறையில் பொது சந்தையில் விற்பனை செய்ய உள்ளது. இதன் மூலம் சுமார் 95,708,984 பங்குகள் விற்பனை செய்யப்படும், ஆனால் இதற்கு செபி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை முதலீட்டாளர்கள் மறக்க வேண்டும். தற்போது ஐபிஓ வெளியிட DRHP அறிக்கை மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது, ஐபிஓ வெளியிடும் தேதி ஆகியவற்றை வெளியிடவில்லை.
பங்கு இருப்பு
டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் டாடா மோட்டார்ஸ் 74.42 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இதை தொடர்ந்து ஆல்பா TC ஹோல்டிங்க்ஸ் 8.96 சதவீத பங்குகளையும், டாடா கேப்பிடல் க்ரோத் பண்ட் 4.48 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
இந்த ஐபிஓ-வில் டாடா டெக்னாலஜிஸ் 20 சதவீத பங்குகளையும், ஆல்பா TC ஹோல்டிங்க்ஸ் 2.40 சதவீத பங்குகளையும், டாடா கேப்பிடல் 1.20 சதவீத பங்குகளை விற்பனை செய்ய உள்ளது.
3000 கோடி ரூபாய் வருமானம்
டாடா மோட்டார்ஸ் டிசம்பர் மாதமே டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஐபிஓ வெளியிட நிர்வாக குழுவிடம் ஒப்புதல் பெற்று இருந்தாலும், இதற்கான DRHP அறிக்கையை மார்ச் 9ஆம் தேதி தான் அளித்துள்ளது.
மேலும் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் டிசம்பர் 2022 முடிவின் 9 மாதத்தில் 3,011.8 கோடி ரூபாய் வரையிலான வருமானத்தை பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 15.5 சதவீதம் அதிகமாகும்.
டிசிஎஸ்
டாடா குழுமம் கடைசியாக 2004 ஆம் ஆண்டில் டிசிஎஸ் நிறுவனத்தை ஐபிஓ வெளியிட்டது. அதன் பின்பு 19 நிறுவனத்திற்கு பின்பு டாடா ப்ளே தொடர்ந்து 2வது நிறுவனமாக டாடா டெக்னாலஜிஸ்-க்கு ஐபிஓ வெளியிட DRHP அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
சந்திரேசேகரன் தலைமையில் டாடா குழுமம் வேகமாக வளர்ந்து வருகிறது.
டாடா டெக்னாலஜிஸ்
டாடா டெக்னாலஜிஸ் ஆட்டோமொபைல் மற்றும் ஏரோஸ்பேஸ் துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு இன்ஜினியரிங், டிசைன், ஐடி எந பல சேவைகளை அளித்து வருகிறது. Tata Technologies வட அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளவ், ஆசிய பசிபிக் சந்தையில் அதிகப்படியான வர்த்தகத்தைக் கொண்டு உள்ளது.
25 நாடுகள், 11000 ஊழியர்கள்
1989 ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட டாடா டெக்னாலஜிஸ், 2005ல் ஐரோப்பிய நாட்டின் INCAT நிறுவனத்தைக் கைப்பற்றித் தற்போது அமெரிக்காவில் டெட்ராய்ட் மற்றும் மிச்சிகன், பிரிட்டன் நாட்டில் வார்விக், என உலகில் சுமார் 25 நாடுகளில் இயங்கி வருவது மட்டும் அல்லாமல் சுமார் 11000 ஊழியர்களைக் கொண்டு உள்ளது.
15வது பெரிய ஐடி நிறுவனம்
பார்சூன் இந்தியா இன்போடெக் பிரிவில் 15வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டாடா டெக்னாலஜிஸ், டாடா மோட்டார்ஸ்-ன் கிளை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் பெரும் பகுதி பங்குகளை டாடா மோட்டார்ஸ் வைத்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் இலக்கு
டாடா மோட்டார்ஸ் இந்தியா எலக்டிரிக் வாகன சந்தையில் பெரும் ஆதிக்கத்தைக் கொண்டு வேகமாக வளர்ச்சி அடைந்தது மட்டும் அல்லாமல் கடந்த 10 வருடத்தில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தான் விட்ட இடத்தைப் பிடித்தாக வேண்டும் என்பதற்காக அடுத்தடுத்து பல புதிய மாடல் கார்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டு வருகிறது.
கடன் அளவு
டாடா மோட்டார்ஸ் தனது நிதி நிலையை மேம்படுத்த கடன் அளவை குறைக்க டாடா மோட்டார்ஸ் சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக பல முன்னணி முதலீட்டு நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பேட்டரி வணிகம்
டாடா மோட்டார்ஸ் நாட்டின் மிகப்பெரிய EV கார் விற்பனை நிறுவனமாக இருக்கும் வேளையில் இந்த ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தும் முயற்சியில் டாடா சன்ஸ் பேட்டரி வணிகத்தில் 4,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்கிறது. தற்போது டாடா சன்ஸ் இந்தப் பேட்டரி நிறுவனத்திற்கு அப்பல்லோ என்ற CODE NAME வைத்துள்ளது
உயர் அதிகாரி நியமனம்
டாடா மோட்டார்ஸின் தலைவர் மற்றும் தலைமை கொள்முதல் அதிகாரியாக (CPO) இருக்கும் தாமஸ் ஃப்ளாக்-ஐ இப்போது டாடா குழுமத்தின் முக்கியத் திட்டமாகப் பார்க்கப்படும் லித்தியம்-அயன் பேட்டரி தயாரிப்புக்காக உருவாக்கப்பட்டு உள்ள புதிய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திட்டம்
இந்த நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளை விற்பனை செய்ய தயாராகியுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் முதலீட்டை உற்பத்தியை விரிவாக்கம் செய்யவும், கடன் அளவை குறைக்கவும் முதலீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications