இன்று ஐபிஓ வெளியிடும் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தெரிந்தாலும், அதன் உண்மையான நிலை நவம்பர் 24 ஆம் தேதி தெரிய வரும். டாடா குழுமத்தில் இருந்து சுமார் 20 வருடங்களுக்குப் பின்பு ஒரு ஐபிஓ வெளியாகும் காரணத்தால் டாடா குழுமத்தின் தீவிர ரசிகர்கள் இந்த ஐபிஓ-வை கொண்டாடி வருகின்றனர்.
டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஐபிஓ நவம்பர் 22 ஆம் தேதி துவங்கினாலும், 21 ஆம் தேதி ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான கதவுகள் திறக்கப்பட்டது, இதில் சுமார் 67 முதலீட்டாளர்கள் 791 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்துள்ளனர். இதனால் ரீடைல் முதலீட்டாளர்கள் மத்தியில் கூடுதல் கவனத்தை டாடா டெக்னாலஜி ஐபிஓ பெற்றுள்ளது.

இன்று துவங்கும் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஐபிஓ-வில் ஒரு பங்கு விலை ரீடைல் சந்தையில் 475 முதல் 500 ரூபாய் விலையில் திறக்கப்பட்டு உள்ளது. டாடா குழுமம் கடைசியாக 2004ல் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் ஐபிஓ-வை வெளியிட்டது, இதன் பின்பு 20 வருடம் கழித்து நவம்பர் 22 முதல் 24 வரையில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஐபிஓ கதவுகள் திறக்கப்பட உள்ளது.
நவம்பர் 21 ஆம் தேதி ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு 1,58,21,071 பங்குகளை 500 ரூபாய் விலையில் ஐபிஓ புக் மேனேஜர்கள் ஒதுக்கீடு செய்துள்ளனர். இந்த ஆங்கர் முதலீட்டுச் சுற்றில் அன்னிய முதலீட்டாளர்கள் உடன் உள்நாட்டு மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்களும் அதிகளவில் முதலீடு செய்து டாடா டெக்னாலஜிஸ் பங்குகளை வாங்கியுள்ளனர்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பட்டியலில் கோல்ட்மேன் சாக்ஸ், கவர்மென்ட் பென்ஷன் ஃபண்ட் குளோபல், பிஎன்பி பரிபாஸ் ஃபண்ட்ஸ், ப்ரூடென்ஷியல் அஷ்யூரன்ஸ் கம்பெனி, எச்எஸ்பிசி குளோபல், புளோரிடா ரிடையர்மென்ட் சிஸ்டம், ஓக்ட்ரீ எமர்ஜிங் மார்கெட்ஸ் ஈக்விட்டி ஃபண்ட், பிரிங்கர் கேபிடல் டெஸ்டினேஷன்ஸ் டிரஸ்ட், கிரேட் ஈஸ்டர்ன் லைஃப்-சிங்கப்பூர் லைஃப் இன்சூரன்ஸ் ஈக்விட்டி, ஆர்பிசி ஏசியா பிபான்ஃபிக் ஃபண்ட், மற்றும் காப்தால் மொரிஷியஸ் இன்வெஸ்ட்மென்ட் ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது.
எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட், ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட், நிப்பான் லைஃப், ஆதித்யா பிர்லா சன் லைஃப் டிரஸ்டி, பிராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்ட், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், கோடக் மியூச்சுவல் ஃபண்ட், டிஎஸ்பி மியூச்சுவல் ஃபண்ட், ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி, மிரே அசெட் மியூச்சுவல் ஃபண்ட், பந்தன் மியூச்சுவல் ஃபண்ட் இப்படிப் பல மியூச்சவல் பண்ட நிறுவனங்கள் என 13 உள்நாட்டு மியூச்சவல் பண்ட் நிறுவனங்கள் 39 திட்டங்கள் வாயிலாக ஆங்கர் முதலீட்டுச் சுற்றில் முதலீடு செய்துள்ளனர்.
இதில் அதிகமாக முதலீடு செய்தது தி ரீஜென்ட்ஸ் ஆஃப் தி யுனிவெர்சிட்டி ஆப் கலிப்போர்னியா - IIFL அசர்ட் மேனேஜ்மென்ட் 4.55 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து உள்நாட்டில் எஸ்பிஐ மல்டி அசர்ட் அலோகேஷன் பண்ட் தான், சுமார் 4.30 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. இது ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட 1,58,21,071 பங்குகளின் அளவீடுகள் மட்டுமே, மொத்த ஐபிஐ பங்குகளோ, மொத்த நிறுவனப் பங்குகளோ கிடையாது.
டாடா குழுமம் டாடா டெக்னாலஜிஸ் ஐபிஓ வாயிலாக 6.08 பங்குகளை விற்பனை செய்து 500 ரூபாய் அப்பர் பேண்ட் அளவில் இருந்து சுமார் 3,042.51 கோடி ரூபாய் முதலீட்டைத் திரட்ட திட்டமிட்டு உள்ளது. இதில் 1.58 கோடி பங்குகளை விற்று 791 கோடி ரூபாய் பெற்ற நிலையில் மீதமுள்ள 2251 கோடி ரூபாயை அடுத்த 3 நாட்களில் திரட்ட உள்ளது.
இந்த ஐபிஓ-வில் டாடா குழுமம் 20.28 லட்சம் பங்குகளை டாடா டெக்னாலஜிஸ் ஊழியர்களுக்கும், 60.85 லட்சம் பங்குகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கும் ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்த பங்கு வெளியீட்டில் 50 சதவீதத்தை நிறுவன முதலீட்டாளர்களுக்கும், 15 சதவீத பங்குகளைப் பெரும் பணக்காரர்களுக்கும், 35 சதவீதத்தை ரீடைல் முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications