டாடா குழுமம் கடைசியாக 2004ல் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் ஐபிஓ-வை வெளியிட்டது, இதன் பின்பு 20 வருடம் கழித்து நவம்பர் 22 முதல் 24 வரையில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஐபிஓ கதவுகள் திறக்கப்பட உள்ளது. இதனால் டாடா குழுமத்தின் தீவிர ரசிகர்கள் இந்த ஐபிஓ-வை கொண்டாடி வருகின்றனர்.
டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஐபிஓ நவம்பர் 22 ஆம் தேதி துவங்கினாலும், 21 ஆம் தேதி ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான முதலீட்டு கதவுகள் திறக்கப்பட்டு இதில் சுமார் 67 முதலீட்டாளர்களில் 13 உள்நாட்டு மியூச்சவல் பண்ட் நிறுவனங்கள் 39 திட்டங்கள் உட்பட 791 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்துள்ளனர்.

இன்று துவங்கும் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஐபிஓ-வில் ஒரு பங்கு விலை ரீடைல் சந்தையில் 475 முதல் 500 ரூபாய் விலையில் திறக்கப்பட்டு உள்ளது. டாடா குழும முதலீட்டுகள் பொதுவாக அதிகப்படியான லாபத்தை நீண்ட கால அடிப்படையில் அளிக்கும் என்பதால் ரீடைல் முதலீட்டாளர்கள் மிகவும் ஆர்வமாக முதலீடு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் டாடா டெக்னாலஜிஸ் வெளியிட்டுள்ள 6.08 கோடி பங்குகளுக்கு ஐபிஓ முதலீட்டுக்கு திறந்து வெறும் 6 மணிநேரத்தில் சுமார் 3.74 மடங்கு முதலீடுகள் குவிந்துள்ளது. ரீடைல் முதலீட்டாளர்களுக்கான முதலீட்டு கதவுகளை திறந்த ஒரு மணிநேரத்தில் 100 சதவீத பங்குகளும் முதலீடு குவிந்தது. அடுத்த 5 மணிநேரத்தில் சுமார் 16.85 பங்குகளுக்கு முதலீடு குவிந்துள்ளது.
டாடா குழுமம் டாடா டெக்னாலஜிஸ் ஐபிஓ வாயிலாக 6.08 பங்குகளை விற்பனை செய்து 500 ரூபாய் அப்பர் பேண்ட் அளவில் இருந்து சுமார் 3,042.51 கோடி ரூபாய் முதலீட்டைத் திரட்ட திட்டமிட்டு உள்ளது. டாடா குழுமம், டாடா டெக்னாலஜிஸ் ஐபிஓ-வின் மொத்த பங்கு வெளியீட்டில் 50 சதவீதத்தை நிறுவன முதலீட்டாளர்களுக்கும், 15 சதவீத பங்குகளைப் பெரும் பணக்காரர்களுக்கும், 35 சதவீதத்தை ரீடைல் முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
ஆங்கர் முதலீட்டு சுற்றில் 1.58 கோடி பங்குகளை விற்று டாடா டெக்னாலஜிஸ் சுமார் 791 கோடி ரூபாய் முதலீட்டுக்கான கோரிக்கைகளை பெற்ற நிலையில் மீதமுள்ள 2251 கோடி ரூபாயை அடுத்த 3 நாட்களில் திரட்ட உள்ளது.
இந்த ஐபிஓ-வில் டாடா குழுமம் ஊழியர்களுக்கும் தனி சலுகையை கொடுத்துள்ளது. சுமார் 20.28 லட்சம் பங்குகளை டாடா டெக்னாலஜிஸ் ஊழியர்களுக்கும், 60.85 லட்சம் பங்குகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கும் ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications