சென்னை: நவம்பர் 2023ல் இந்திய பங்குச்சந்தையில் அறிமுகமான டாடா டெக்னாலஜிஸ் மீதான பார்வை தற்போது முதலீட்டாளர்களிடையே மாறி வருகிறது. மேலும் பங்குதாரர்கள் மத்தியில் இதன் மீதான மதிப்பு குறைந்து வருவதற்கான அறிகுறிகள் தற்போது அதிகளவில் தென்படுகின்றன. இந்தப் போக்குக்கான காரணம் என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஜூன் 19ஆம் தேதியன்று வெளியான அறிக்கையில், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs), டாடா டெக்னாலஜிஸ் பங்குகளை விற்க அதாவது SELL என்ற ரேடடிங்-ஐ கொடுத்தது மூலம் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை கிளப்பியது.

இது மட்டும் அல்லாமல் ஜூன் 18-ஆம் தேதியின் விலையான ரூ. 1029 ரூபாயை விட 12 சதவீதம் குறைவான விலையான ரூ. 900 என்ற விலையையும் பங்குகளுக்கு கோல்ட்மேன் சாக்ஸ் நிர்ணயித்துள்ளது. கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் மட்டுமல்லாமல், டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மீதான நம்பிகையை மாற்றிக் கொள்ளும் பங்குதாரர் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இன்றைய வர்த்தகத்தில் டாடா டெக்னாலஜிஸ் பங்குகளின் விலை 0.80 சதவீதம் உயர்ந்து 1000.05 ரூபாயாக உள்ளது. இந்நிறுவனத்தின் 52 வார குறைவான விலை 982.25 ரூபாய், இன்று அதிகப்படியாக 992.10 ரூபாய் வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
19 ஆண்டுகளுக்குப் பிறகு டாடா குழுமத்தில் இருந்து பங்குச்சந்தைக்கு அறிமுகமான முதல் நிறுவனம், டாடா டெக்னாலஜிஸ். இந்திய வரலாற்றில், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளன்றே 3வது அதிக லாபத்துடன் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தற்போதைய நிலவரப்படி, சுமார் 6 நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு டாடா டெக்னாலஜிஸ் பங்குகளுக்கு SELL ரேட்டிங்-ஐ கொடுத்துள்ளது. ஆனால் 3 நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு டாடா டெக்னாலஜிஸ் பங்குகளை BUY ரேட்டிங் பரிந்துரைத்துள்ளது.
டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் கடந்த Q4 காலாண்டின் நிதி நிலை அறிக்கையைத் தொடர்ந்து பல பங்குதாரர் நிறுவனங்கள் தங்கள் பரிந்துரைகளை மாற்றி அமைத்துள்ளன.
டாடா டெக்னாலஜிஸ் என்பது டாடா குழுமத்தின் உற்பத்தியை மையமாகக் கொண்ட பொறியியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும், இது முதன்மையாக வாகனத் துறையில் கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் கோயம்புத்தூரில் கூட தனது புதிய அலுவலகத்தை திறந்தது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 30-ஆம் தேதி NSE மற்றும் BSE ஆகிய இரண்டு பங்குச்சந்தைகளிலும் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட்டது. பங்குகளின் விலை, அவற்றின் ஐபிஓ விலையை விட 140 சதவீத பிரீமியத்தில் பட்டியலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தேசிய பங்குச்சந்தையில் டாடா டெக்னாலஜிஸ் பங்குகளின் விலை ரூ.1200 இல் தொடங்கி ரூ.1328 இல் முடிந்தது. முதலீட்டாளர்களிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டிய இந்த ஐபிஓ, ரூ.6.08 கோடி பங்குகளை விற்பனைக்காக வழங்கியது. மொத்தமாக 73.38 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன.
டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம், மார்ச் 31, 2024-ஆம் ஆண்டு முடிவடைந்த காலாண்டிற்கான நிகர லாபம், முந்தைய நிதி ஆண்டின், இதே காலாண்டில் இருந்த ரூ. 217 கோடி ருபாயில் இருந்து 28 சதவீதம் குறைந்து, ரூ.157 கோடி ருபாயாக இருந்தது.
அதே போல நடப்பு நிதியாண்டின் ஆப்பரேட்டிங் வருவாய் 7 சதவீதம் சரிந்து ரூ.1,301 கோடியாக உள்ளது. பங்குச்சந்தையில் அறிமுகமானதில் இருந்து, டாடா டெக்னாலஜிஸ் பங்குகள் தோராயமாக 23 சதவீதம் சரிந்துள்ளது. ஜூன் 20-ஆம் தேதியின் முடிவில் ரூ.1,011-ல் என்ற விலையில் வர்த்தகம் செய்யப்பட்டது.
டாடா டெக்னாலஜிஸின் முக்கிய வாடிக்கையாளர்களில் ஒன்றான வியட்நாம் நாட்டின் வின்ஃபாஸ்ட்-டிடமிருந்து வரும் வருவாய் குறைவாக இருக்கும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் அச்சம் தெரிவித்துள்ளது.
Q4 காலாண்டில், வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின், சேவைகள் பிரிவின் வருவாய் 0.6 சதவீதம் குறைந்து ரூ. 995 கோடியாக இருந்தது. கூடுதலாக, கோல்ட்மேன் சாக்ஸ் 2025ஆம் நிதியாண்டின், Q1 காலாண்டிலும் வின்ஃபாஸ்ட் வருவாயில் மிதமான நிலையே இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.
டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்த சவால்களை எவ்வாறு எதிர்கொள்ள இருக்கிறது என்பதைப் பொறுத்தே எதிர்காலத்தில் பங்குகளின் விலை உயருமா இல்லை வீழ்ச்சி அடையுமா என்ற விவரங்கள் தெரிய வரும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications